தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Fenugreek Gravy Three Days Will Not Spoil Dill Broth That Gives Health! Do It And Take A Rest

Fenugreek Kulambu : மூன்று நாள் ஆனாலும் கெடாது! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெந்தய குழம்பு! செய்துவிட்டு ரெஸ்ட் எடுங்க!

Priyadarshini R HT Tamil
Jan 31, 2024 09:39 AM IST

Fenugreek Gravy : மூன்று நாள் ஆனாலும் கெடாது! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெந்தய குழம்பு! செய்துவிட்டு ரெஸ்ட் எடுங்க!

Fenugreek Kulambu : மூன்று நாள் ஆனாலும் கெடாது! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெந்தய குழம்பு! செய்துவிட்டு ரெஸ்ட் எடுங்க!
Fenugreek Kulambu : மூன்று நாள் ஆனாலும் கெடாது! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெந்தய குழம்பு! செய்துவிட்டு ரெஸ்ட் எடுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

(சூடான தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

வெந்தயம் – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகு அரை ஸ்பூன்

(இதை ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் வாசம் வரும் வரை ட்ரையாக வறுத்து, நிறம் மாறியவுடன் எடுத்து, ஆறியவுடன் ஒரு காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடியாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சின்ன வெங்காயம் – 20 (நீளவாக்கில் நறுக்கியது)

பூண்டு – 20 பல் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியா நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

குழம்பு மிளகாய் பொடி – 2 ஸ்பூன்

(வீட்டில் பயன்படுத்தும் பொடி அப்படி ரெடிமேட் பொடி இல்லாவிட்டால், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழம்பு மிளகாய் தூள் அதிக சுவை தரும்)

தேங்காய் பால் தயாரிக்க

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 2 பல்

(தேங்காய் மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்)

வெல்லம் – ஒரு சிறிய துண்டு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், சின்ன வெங்காயம், பூண்டு பல் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் தூள், கல் உப்பு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் அதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அடுத்து தேங்காய்ப்பால், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் சூடான மற்றும் சுவையான வெந்தயக்குழம்பு தயார்.

இந்தக்குழம்பை 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டுப்போகாது. இதில் உள்ள புளி ஊறஊறதான் குழம்புக்கு கூடுதல் சுவை தரும்.

வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உடலுக்கு நன்மை அளிக்கிறது.

இது செரிமானம் மற்றும் எடை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.

உடல் சூட்டை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

வெந்தயம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதால், இந்த குழம்பு உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்