Fennel Drink : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? எனில் இது மட்டும் போதும்!
Fennel Drink : குழந்தைகள் திரையை பார்த்து பார்த்து கண் பார்வை குறைபாட்டால் அவதிப்படுகிறார்களா? அல்லது உடல் சோர்வால் தவிக்கிறார்களா? அவர்களுக்கு இது மட்டும்போதும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குழந்தைகள் திரையை பார்த்து பார்த்து கண் பார்வை குறைபாட்டால் அவதிப்படுகிறார்களா? அல்லது உடல் சோர்வால் தவிக்கிறார்களா? அவர்களுக்கு இது மட்டும்போதும்.
அவர்களின் உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு பெறுவார்கள். அவர்கள் படிப்பிலும் சுட்டியாவார்கள். பார்வை குறைபாடு சரிசெய்யப்பட்டு, நன்றாக உணவு எடுத்துக்கொள்ள துவங்குவார்கள். இதன் மூலம் அவர்களின் உடல் உறுதிபெறும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பெரியவர்களுக்கு அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், கை-கால் வலி மற்றும் மூட்டு வலி போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கும். சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து.
தேவையான பொருட்கள்
சோம்பு – ஒரு ஸ்பூன்
(இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக தூண்டும். இதனால் பருவ கால சளி, இருமல் மற்றும் காய்ச்சலை போக்கும். ஆஸ்துமா உள்ளவர்கள் சோம்பை அதிகம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
இதில் அதிகளவில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உடல் சோர்வைப் போக்கும். உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். மனஅழுத்தத்தை நீக்கும். ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.
அஜீரணக்கோளாறு, மலசிக்கல், வாயுத்தொலை ஆகியவற்றை போக்கும். சோம்பில் உடலுக்கு தேவையான எண்ணெய் சத்து உள்ளது. இது உடலில் உள்ள கழிவை நீக்கும். உடலை சுத்தமாக வைக்கும். உணவு நஞ்சாகி வயிற்று வலியால் அவதிப்படும்போது சோம்பு அதை குணப்படுத்தும்)
கட்டி கற்கண்டு – ஒரு பெரிய துண்டு
(டைமண்ட் கற்கண்டு சேர்க்கக்கூடாது. பெரிய கட்டி கற்கண்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அதிகளவில் கால்சியம் சத்துக்கள் உள்ளது)
செய்முறை
கோம்பு மற்றும் கற்கண்டை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உரலில் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.
இதை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம் அல்லது வடிகட்டாமலும் பருகலாம்.
இந்தப்பொடியை ஒரு ஸ்பூன் அப்படியே வாயில் போட்டு சுவைக்கவும் கொடுக்கலாம். உமிழ்நீருடன் சேர்த்து சாப்பிடும்போது இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
இதை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். ஆனால் பாலில் சேர்த்து பருகும்போது, இரவு உறங்கச் செல்லும்முன் பருகுவது நல்லது.
இரவு இதை பருகிவிட்டு படுத்து, அடுத்த நாள் எழும்போது, உடலில் சோர்வை நீக்கிவிடும். மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. வயிறை நன்றாக சுத்தம் செய்துவிடும். பசியைத் தூண்டும்.
அஜீரணப் கோளாறு, வாயுத்தொல்லை என அனைத்தையும் சரிசெய்யும். சிலர் உறக்கமின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் கொடுக்கம்.
கை-கால் வலி, மூட்டு வலியால் அவதிப்படுவபவர்களுக்கு நல்ல பலனைத்தரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்யும். இதில் உள்ள அதிக பொட்டாசியச் சத்துக்கள், ரத்த ஓட்டத்தை சீராக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்