தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Fatty Liver These 8 Simple Ways Are Enough Your Damaged Liver Will Become A New One Easy To Follow Too

Fatty Liver : இந்த 8 எளிய வழிகள் போதும்! பாதிக்கப்பட்ட உங்கள் கல்லீரல் புதிதாக மாறும்! கடைபிடிப்பதும் எளிது!

Priyadarshini R HT Tamil
Mar 16, 2024 02:32 PM IST

Fatty Liver : உங்கள் தினசரி உணவில், வைட்டமின் டி சேர்த்துக்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக உங்களுக்கு போதிய அளவு சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் வைட்டமின் டியை நீங்கள் வேறு வடிவங்களில் கட்டாயம் எடுப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

Fatty Liver : இந்த 8 எளிய வழிகள் போதும்! பாதிக்கப்பட்ட உங்கள் கல்லீரல் புதிதாக மாறும்! கடைபிடிப்பதும் எளிது!
Fatty Liver : இந்த 8 எளிய வழிகள் போதும்! பாதிக்கப்பட்ட உங்கள் கல்லீரல் புதிதாக மாறும்! கடைபிடிப்பதும் எளிது!

ட்ரெண்டிங் செய்திகள்

ஃபேட்டி லிவர், கல்லீரல் செல்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுவது ஆகும். இந்த பிரச்னை அதிகரித்து வருவதுடன், போதிய ஆரோக்கிய குறைபாடுகளையும் உடலில் ஏற்படுத்துகிறது. ஆனால் நீங்கள் அதை சரிசெய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள ஒரு நற்செய்தி. இந்த எளிய வாழ்வியல் முறை மாற்றங்களை வைத்து உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள்.

 

உணவுப்பழக்கம்

உங்கள் உணவில் அதிகம் காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். செரிமானத்தை அதிகரித்து, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

அதிக எடையை குறையுங்கள்

உங்கள் உடலில் உள்ள குறைந்தளவு எடையைக்கூட குறைத்தால் அது உங்கள் உடலுக்கு நன்மையைக்கொடுக்கும். உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க உதவும். எனவே கொஞ்சம், கொஞ்சமாக எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் உங்கள் உடலில் போதிய எடையை பராமரிக்க உதவும். எனவே உங்களுக்கு உதவக்கூடிய நீடித்த எடை குறைப்பு திட்டத்தை உங்கள் தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு பின்பற்றுங்கள்.

ஏரோபிக் பயிற்சிகள்

நடை, நீச்சல் அல்லது சைக்கிளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது. இது உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

அதிக கலோரிகளை குறைக்கும். எனவே தினமும் குறைந்தது அரை மணி நேரம், மிதமான ஆழ்ந்த ஏரோபிக் உடற்பயிற்சி உங்களின் கல்லீரல் நன்றாக வேலை செய்வதற்கு உதவும். மேலும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.

போதிய வைட்டமின்கள் எடுப்பது

உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் டி மிகவும் அவசியம். அது கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் தினசரி உணவில், வைட்டமின் டி சேர்த்துக்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக உங்களுக்கு போதிய அளவு சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் வைட்டமின் டியை நீங்கள் வேறு வடிவங்களில் கட்டாயம் எடுப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

முக்கிய மினரல்கள்

வாழைப்பழம், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற பொட்டாசிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொண்டால், உங்களுக்கு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் உடலில் தண்ணீரை சமநிலையாக்கும். பீட்டாய்ன் என்ற உட்பொருள் பீட்ரூட் மற்றும் கீரையில் உள்ளது. இது கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை

ஃபேட்டி லிவர் பிரச்னையை குணப்படுத்த நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். எனவே உங்கள் சர்க்கரை அளவை அவ்வப்போது சரிபார்த்துக்கொண்டு, போதிய மருந்துகள் எடுத்து, சர்க்கரையை கட்டுக்குள் வைத்திடுங்கள். வாழ்க்கைமுறையில் போதிய மாற்றங்களை செய்து, உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

கொழுப்பு கட்டுப்பாடு

அதிக கொழுப்பு அளவால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அதன் மூலம் இதய பிரச்னைகள் ஏற்படும் ஆபத்தையும் கொண்டுவரும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்களை கடைபிடியுங்கள். கொழுப்பை குறைவான உணவுகள், சாச்சுரேடட் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்டு, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து, ஆரோக்கியமான கொழுப்பை உடலில் சேர்த்து, உடல் எடையை பராமரித்தல் நல்லது.

மதுவை தவிர்ப்பது

அதிகப்படியான மதுவை தவிர்ப்பது உங்கள் ஃபேட்டி லிவர் பிரச்னைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹால் அளவை கட்டுப்படுத்தி பலன் பெறுங்கள். இதனால் உங்கள் கல்லீரல் மேலும் சேதமடையாமல் பாதுகாக்கப்படும்.

 

WhatsApp channel

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்