தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Fatty Liver 3 Days On An Empty Stomach This Juice Liver Dissolves Toxins

Fatty Liver : வெறும் வயிற்றில் 3 நாட்கள் இந்த ஜூஸ்! கல்லீரல் நச்சுக்களை கரைந்தோடவிடும்!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 01:25 PM IST

Fatty Liver : வெறும் வயிற்றில் 3 நாட்கள் இந்த ஜூஸ்! கல்லீரல் நச்சுக்களை கரைந்தோடவிடும்!

Fatty Liver : வெறும் வயிற்றில் 3 நாட்கள் இந்த ஜூஸ்! கல்லீரல் நச்சுக்களை கரைந்தோடவிடும்!
Fatty Liver : வெறும் வயிற்றில் 3 நாட்கள் இந்த ஜூஸ்! கல்லீரல் நச்சுக்களை கரைந்தோடவிடும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கல்லீரல் நமது உடலில் முக்கியமான உறுப்பு. உடலுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட வேலைகளை அது செய்கிறது. கல்லீரலில் நச்சுக்கள் சேரும்போது அது ஃபேட்டி லிவர் பிரச்னைகளை உருவாக்குகிறது. 

இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் உடலில் எனர்ஜி இருந்தாலும் அதை நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட இயலாது. இதனால் சோம்பல் உணர்வு ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் எப்போதும் தூக்கம் ஏற்படும் உணர்வுதான் இருக்கும்.

கல்லீரலில் அதிக நச்சுக்கள் சேர்வது மிக முக்கிய காரணம் ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொள்வதுதான் அல்லது ஃப்ரைட் உணவுகள் அதாவது எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது காரணமாகும் அல்லது பசிக்கும்போது உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது காரணமாகும்.

பொதுவாக கல்லீரலில் பிரச்னைகள் உள்ளது என்பதை எளிதாக நம்மால் கண்டுபிடிக்க முடியும். கண்களைச்சுற்றி கருவளையம் இருந்தாலோ அல்லது முகத்தில் கருந்திட்டுக்கள் ஏற்பட்டாலோ கல்லீரலில் பிரச்னை உள்ளது என்று பொருள். வயிறு உப்புசம் இருக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படும். இவையனைத்தும் கல்லீரல் சரியாக இயங்காததால் ஏற்படும் பிரச்னைகள் ஆகும்.

கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கற்றாழை – சிறிதளவு

(கற்றாழை எடுத்து, அதில் உள்ள ஜெல் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே சாப்பிடக்கூடாது. அதில் நிறைய நச்சுப்பொருட்கள் உள்ளன. எனவே அதை 2 அல்லது 3 முறை நன்றாக கழுவிவிடவேண்டும். பின்னர்தான் அதை பயன்படுத்தவேண்டும். கற்றாழை ஜெல்லில் நிறைய ஃபைட்டோ நியூட்டிரியன்ட்கள் உள்ளது. இவைதான் கல்லீரலில் உள்ள நச்சுக்களை உடனடியாக கரைத்து வெளியேற்ற உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது)

நெல்லிக்காய் – 1

(நெல்லிக்காய் இல்லாவிட்டால், நெல்லிக்காய் பொடியையும் எடுத்துக்கொள்ளலாம். நெல்லிகாயில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை சுறுப்பாக்கும். கல்லீரலுக்கு நல்லது)

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

கல்லீரலில் பாதிப்பு உள்ளவர்கள் கொத்தமல்லித்தழையை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. அது கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.

வறுத்த சீரகப்பொடி அல்லது சீரகப்பொடி – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

(மஞ்சள் பொடியில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு நன்மையை தரும். தினமும் கால் முதல் அரை ஸ்பூன் சேர்த்துக்கொள்வது நல்லது)

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், கற்றாழை ஜெல், மல்லித்தழை ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில், சீரகத்தூள், மஞ்சள் தூள் உங்களுக்கு சுவைக்கு தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இந்துப்பு சேர்ப்பது நல்லது. உப்பில்லாமல் பருக விரும்புபவர்கள் அப்படியே கூட பருகலாம்.

இதை 3 நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வெறும் வயிற்றில் பருகிவிட்டு, பின்னர் ஒரு மணி நேரம் எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

மூன்று நாட்கள் தொடர்ந்து பருகினால் கல்லீரல் நன்றாக இயங்கத்துவங்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற துவங்கும். ஃபேட்டி லிவர் பிரச்னை குணமாகும்.

உடலில் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு தேவைப்படும்போது குடித்துக்கொள்ளலாம். இரவில் மட்டும் பருகக்கூடாது. மற்ற எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்