கொழுப்பு : உடலில் கொழுப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க! இதய ஆரோக்கியம் மேம்படும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொழுப்பு : உடலில் கொழுப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க! இதய ஆரோக்கியம் மேம்படும்!

கொழுப்பு : உடலில் கொழுப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க! இதய ஆரோக்கியம் மேம்படும்!

Priyadarshini R HT Tamil
Published Apr 22, 2025 06:00 AM IST

கொழுப்பு : உங்கள் உடலில் கொழுப்பைக் கட்டுபடுத்த வேண்டுமெனில், நீங்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கொழுப்பு : உடலில் கொழுப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க! இதய ஆரோக்கியம் மேம்படும்!
கொழுப்பு : உடலில் கொழுப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க! இதய ஆரோக்கியம் மேம்படும்!

காய்கறிகள் எண்ணெய்

சூரியகாந்தி உள்ளிட்ட ஆரோக்கியமான காய்கறிகள் எண்ணெயை தேர்ந்தெடுக்கவேண்டும். அது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.

ஃபேட்டி ஃபிஷ்

ஃபேட்டி ஃபிஷ் சாப்பிடுவது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கும். உங்களுக்கு தேவையான ஒமேகா 3ஐய் கொடுக்கும். இவை உடலில் ட்ரைகிளிசரைட்களைக் குறைத்து, இதயத்தைக் காக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். அது அதிகப்படியாக துடிப்பதைத் தடுக்கும்.

அதிகளவு முழு தானியங்களை சாப்பிடவேண்டும்

சிவப்பு அரிசி, குயினோவா மற்றும் முழுதானியங்களை அதிகளவு எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்பு அளவைக் குறைக்க உதவும்.

ஸ்டிரால்ஸ் மற்றும் ஸ்டெனால்ஸ்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

தாவர அடிப்படையிலானா உட்பொருட்களான இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்கள் குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்க உதவுகிறது. கொழுப்புக் கட்டிகளையும் குறைக்கிறது.

சோயா

சோயா பால் அல்லது டோஃபூ போன்ற சோயா புரதத்தை தினமும் 25 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டால், அது உங்கள் உடலில் கொழுப்பைக் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள்

ஃபிரஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளில் கலோரிகள் குறைவு, இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவும்.

புரதச்சத்துக்கள்

சிவப்பு இறைச்சிக்கு பதில் கொழுப்பு இல்லாத புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தோல் நீக்கப்பட்ட கோழி உணவுகள், மீன், டோஃபூ மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடவேண்டும். சிவப்பு இறைச்சி என்பது கொழுப்பு நிறைந்தது ஆகும். இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்.

காரம் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும்

உங்கள் உணவில் கொழுப்பைக் குறைக்கும் மசாலாக்களை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் மஞ்சள், இஞ்சி, பூண்டு என கொழுப்பைக் குறைக்கும் நன்மை தரும் உட்பொருட்கள் உள்ளன.

மது மற்றும் புகையை நிறுத்துங்கள்

மது அருந்துவது மற்றும் புகைப்பது உங்கள் இதயத்தை விரைவாகவே சேதப்படுத்தும். உலக சுகாதார நிறுவனம் கூட மது மற்றும் புகைக்கு எதிராக எச்சரித்துள்ளது.

சர்க்கரை மற்றும் ரிஃபைண்ட் கார்போஹைட்ரேட்கள்

சர்க்கரை கலந்த பானங்களை குறைத்துக்கொள்ளுங்கள், வெள்ளை பிரட் மற்றும் ஸ்வீட்களை நிறுத்துங்கள். இவை உங்கள் உடலில் ட்ரைகிளிசரைட்களின் அளவைக் உயர்த்தும். நல்ல கொழுப்பைக் குறைக்கும். இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைத் அதிகரித்து, உடல் எடையை உயர்த்தும்.