Family Deity Worship : உங்கள் குல தெய்வத்தை எப்படி வழிபடவேண்டும்? இதை மட்டும் செய்தால் பிரச்னைகள் விலகும்!
Family Deity Worship : உலகம் முழுவதும் குலதெய்வ வழிபாடு என்பது உள்ளது. பல கலாச்சாரங்கள், பல மதங்கள், பல பழக்கங்களை கொண்டுள்ளனர். குல தெய்வ வழிபாட்டில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
குலதெய்வம் என்பது கலாச்சாரம் மற்றும் மதத்திற்கு ஏற்ப மாறுபடும். பெரும்பாலான கலாச்சாரங்களில், குல தெய்வம் என்பது குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரோடு தொடர்புடையதாக இருக்கும். குல தெய்வம் என்பது அவர்களின் குடும்ப தெய்வமாகும். வழிவழியாக அந்த பரம்பரையினரே குல தெய்வத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
குலதெய்வத்தின் காரணமே அந்த தெய்வம் நமக்கு ஆசி வழங்கும், வழிகாட்டும் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் என்பதுதான். அந்த குடும்பத்தினரை அந்த தெய்வம் காப்பாற்றும் என்பதுதான் நம்பிக்கை.
இந்து மதத்தில் குறிப்பிட்ட சில தெய்வம் அல்லது தெய்வங்களை குல தெய்வமாக வழிபடுவார்கள். இது மத, கலாச்சாரம் மற்றும் குடும்ப தேர்வுகளின் அடிப்படையில் ஆனது. அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட அம்சம் அந்த குடும்பத்தின் மதிப்பீடுகளில் பிரிதிபலிக்கும்.
உலகம் முழுவதும் குலதெய்வ வழிபாடு என்பது உள்ளது. பல கலாச்சாரங்கள், பல மதங்கள், பல பழக்கங்களை கொண்டுள்ளனர். குல தெய்வ வழிபாட்டில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்துக்களின் சாஸ்திரங்களின்படி, ஒருவரின் உயிரை பறிப்பவர் எமதர்ம ராஜாவாக கருதப்படுகிறது. அந்த எமதர்மராஜா ஒருவரின் உயிரைப் பறிக்கும் முன் குல தெய்வத்திடம் அனுமதி பெற்றபின்னர்தான் பறிப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
எனவேதான் ஒருவர் உயிர்போகும் தருணத்தில் தங்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நாம் துன்பத்தில் துவளும்போது எந்த தெய்வத்தையும்விட குல தெய்வமே முதலில் வந்து துணை நிற்பதாக இந்து மத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் குழந்தை முதலே குலதெய் வழிபாடு என்ற ஒன்றை செய்து வந்திருப்போம்.
நீங்கள் இதுவரை உங்கள் குல தெய்வங்களை எப்படி வேண்டுமானாலும் வழிபட்டு வந்திருக்கலாம். ஆனால், இந்த முறையில் நீங்கள் வழிபட்டால் உங்கள் வீட்டில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகும்.
உங்களின் குல தெய்வம் எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண் தெய்வம் எனில் அமாவாசையன்றும், பெண் தெய்வமெனில் பவுர்ணமியன்றும் சென்று வழிபடவேண்டும்.
அன்றைய நாளில் பகல், இரவு என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் வழிபாடு நடத்தலாம். அந்த வழிபாட்டில் நீங்கள் தேங்காயில் தீபம் ஏற்ற வேண்டும்.
9 மூடி தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு நீங்கள் 5 தேங்காய்களை உடைக்க வேண்டும். 9 மூடியை மட்டும் பயன்படுத்தவேண்டும். தேங்காய்களில் நல்ல பசு நெய்யைவிட்டு, பஞ்சு திரிபோட்டு விளக்கு ஏற்றவேண்டும்.
இவ்வாறு நீங்கள் வழிபாடு செய்து வரும்போது, உங்கள் வீட்டில் உள்ள பிரச்னைகள் அத்தனையும் விலகி மகிழ்ச்சி பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, உங்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தகுந்த நிபுணர்களை அணுகுவதுதான் சிறந்த வழி. அதேபோல் உடல் பிரச்னைகளுக்கு தெய்வ வழிபாடுகள் உதவும் என்பது மூடநம்பிக்கை. அவற்றை தீர்க்க தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் நம்பிக்கை அடிப்படையிலானவை. இவை உங்களுக்கு உதவலாம். ஆனால், எதிலும் அறிவார்ந்த அணுகுமுறை தேவை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்