Karisalankanni: நிம்மதியான தூக்கம் வேணுமா?.. பொடுகு தொல்லையா?.. கல்லீரல் பிரச்சினையா? - இந்தக்கீரை சாப்பிடுங்க!
கரிசாலங்கண்ணி கீரையின் அபார பயன்கள் இங்கே!
கரிசாலங்கண்ணி கீரையானது நமது முடிக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று நெடுங்காலமாக ஒரு கருத்து இருக்கிறது. முடி வளர்ச்சி சம்பந்தமான பிரச்சினையில் மருந்தாக கொடுக்கப்படக்கூடிய minoxidil விட - கரிசாலங்கண்ணி கீரை நல்ல பயனை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கரிசலாங்கண்ணி கீரை ஆயிலை நாம் அப்ளை செய்யும்பொழுது பொடுகு பிரச்சனையானது பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முடி வளர்ச்சிக்கும் இது பயன்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வெள்ளை முடி,செம்பட்டையாதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோருக்கு இது தீர்வு கொடுப்பதாக தெரியவில்லை. ஆனால் சில பேருக்கு இதில் தீர்வு கிடைத்திருக்கிறது.
இந்தக்கீரையில் மக்னீசியம் சத்தானது அதிகமாக இருக்கிறது.
நமது தசைகளை நன்றாக தளர்வு படுத்த கூடிய திறன் இந்தக்கீரைக்கு உண்டு. ஆகையால் நிம்மதியான தூக்கம் வேண்டுமென்றால் இந்தக்கீரையை எடுத்துக்கொள்ளலாம்.
சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படும் நபர்களும் இந்த கீரையை அவர்களது உணவில் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். காரணம் இது தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடிய ஒரு கீரை ஆகும்.
அதேபோல கல்லீரல் பலவீனமாக உள்ளவர்கள் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த கீரையை எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி: மருத்துவர் கார்த்திகேயன்!
டாபிக்ஸ்