தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Face Glow : வெள்ளையாக பளிச்சென முகம் பளபளக்க வேண்டுமா? இதோ இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

Face Glow : வெள்ளையாக பளிச்சென முகம் பளபளக்க வேண்டுமா? இதோ இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

Priyadarshini R HT Tamil
May 25, 2024 05:32 PM IST

Face Glow : வெள்ளையாக பளிச்சென முகம் பளபளக்க வேண்டுமெனில், இதோ இந்த இரண்டு குறிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள்.

Face Glow : வெள்ளையாக பளிச்சென முகம் பளபளக்க வேண்டுமா? இதோ இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!
Face Glow : வெள்ளையாக பளிச்சென முகம் பளபளக்க வேண்டுமா? இதோ இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

முகத்தை உடனடியாக பொலிவாக வைத்திருக்க வேண்டுமெனில், என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கருவளையம், கரும்புள்ளிகளுக்கு சிறந்த பலனைத்தரும். கழுத்துப்பகுதியில் கறுப்பு நிறத்தையும் போக்கும்.

ஸ்கிரபிங்

முதலில் ஸ்கிரப் செய்யவேண்டும். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவேண்டும்.

தேவையான பொருட்கள்

இன்ஸ்டன்ட் காபித்தூள் – ஒரு ஸ்பூன்

சர்க்கரை – ஒரு ஸ்பூன

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் (இதற்கு பதில் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கூட சேர்த்துக்கொள்ளலாம். இது எலுமிச்சை சாறு சருமத்தில் ஏற்படுத்தும் எரிச்சலைப்போக்கும்)

(எலுமிச்சைசாறில் உள்ள வைட்டமின் சி சத்து, இயற்கையாகவே ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படும். மேலும் சருமத்தை பளிச்சென வைத்துக்கொள்ளும். காபி பவுடர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கும்)

செய்முறை

இதை ஒருமுறை மட்டு கலந்து, முகம், கழுத்துப்பகுதிகளில் தடவி நன்றாக தேய்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் தேய்த்தால் போதும். அதிக நேரம் தேய்க்கவேண்டாம். பின்னர் அதை துடைத்துவிடலாம் அல்லது கழுவிவிடலாம்.

ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

கடலை மாவு – அரை ஸ்பூன்

காபி தூள் – அரை ஸ்பூன்

அரிசி மாவு அல்லது கோதுமை மாவு – அரை ஸ்பூன்

(இவையிரண்டும் சருமத்துக்கு உடனடி பளபளப்பைக் கொடுக்கும்)

தயிர் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

ரோஸ் வட்டார் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கடலை மாவு, காபி தூள், அரிசி மாவு, தயிர், எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் என அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் பேக் போடவேண்டும்.

இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காயவைத்து, முகத்தை நன்றாக கழுவிவிடவேண்டும்.

இதை செய்தபின் நல்ல மாற்றம் தெரியும். இதை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்யவேண்டும்.

கழுத்துப்புறத்தில் உள்ள கருப்பு நிறங்கள் மாறும். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்