Face Glow Pack : உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை மட்டும் இத செய்ங்க!-face glow pack want your face to glow like gold do this only twice a week - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Face Glow Pack : உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை மட்டும் இத செய்ங்க!

Face Glow Pack : உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை மட்டும் இத செய்ங்க!

Priyadarshini R HT Tamil
May 04, 2024 11:22 AM IST

Face Glow Pack : வாரத்தில் இரண்டு முறை மட்டுமே இதை பயன்படுத்தினால் போதும். உங்கள் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.

Face Glow Pack : உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை மட்டும் இத செய்ங்க!
Face Glow Pack : உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு முறை மட்டும் இத செய்ங்க!

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

முகத்தில் வடியக்கூடிய அதிகப்படியான எண்ணெய் மற்றும் அதனால் ஏற்படும் முகப்பருக்கள் உள்ளிட்டவற்றை நீக்கி உங்கள் முகத்தை தங்கம்போல் ஜொலிக்கவைக்கும். கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி – 1

கிரீம்களுக்கு பதில், இதுபோன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நீங்கள் பலன்பெற முடியும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் பொலிவிழந்த சருமத்தை காக்கிறது. இதில் புளிப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இரண்டு சுவைகளும் நிறைந்தது. இது இறந்த செல்களை முகத்தில் இருந்து நீக்குகிறது.

எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்குகிறது. முகத்தில் உள்ள சரும சுருக்கத்தைப் போக்குகிறது. தக்காளி பழத்தை வழக்கமாக பயன்படுத்தும்போது முகத்திற்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. முகத்தை பளபளப்பாக வைக்கும்.

காய்ச்சாத பால் – சிறிதளவு

முகத்திற்கு பொலிவைக் கொடுப்பதுடன், மேக் அப்பை களைப்பதற்கும் இயற்கை முறையில் உதவுகிறது.

ரோஸ் வாட்டர் – சிறிதளவு

முகத்தில் பருக்கள் ஏற்படுத்தும் துவாரங்களைப் போக்கும்.

செய்முறை

தக்காளியை மட்டும் நறுக்கி, தனியாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து, பெரிய வடிகட்டியில் வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் பாலையும் சேர்க்க வேண்டும். பின்னர் ரோஸ் வாட்டரை சேர்க்கவேண்டும்.

இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் காயவைத்து கழுவவேண்டும்.

ஃபிரிட்ஜில் நேரடியாக வைக்கும்போது ஒரு வாரம் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் அதற்கு பதில் இதை ஜஸ் கட்டிகள் டிரேவில் சேர்த்து ஐஸ்கட்டிகளாக மாற்றிக்கொண்டால், உங்களுக்கு தேவைப்படும்போது எடுத்து முகத்தில் மசாஜ் செய்துகொள்ளலாம். ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை முகம், கழுத்துப்பகுதிளிலும், பஞ்சுவைத்து இதை தடவவேண்டும். வாரத்தில் ஒரு நாள் முகத்தில் ஆவிபிடிக்கவேண்டும். அது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும்.

தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் தூள், எலுமிச்சை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவேண்டும்.

இதை இரவில் செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும். அனைத்து வகை சருமத்திற்கும் நல்லது.

முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியைக்கொடுக்கும். முகத்தை ஜொலிக்க வைக்கும். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். தழும்புகள் மறையும்.

வாரத்தில் இரண்டு முறை அல்லது தினமுமே பயன்படுத்தலாம். தங்கம்போல் முகம் ஜொலிக்கும். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.