Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?

Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Jul 26, 2024 04:01 PM IST

Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?

Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?
Eye Health : காந்த கண்ணழகுடன் வலம் வரவேண்டுமா? கண் பராமரிப்பில் 20-20-20 விதி என்றால் என்னவென்று தெரியுமா?

உங்கள் கண் பார்வையை கூராக்கும் பாதுகாப்பு குறிப்புகள்

கோடையை வெப்பத்தை குறைக்க இந்த குளிர் மழைக்காலங்கள் உதவும். ஆனால் இந்த காலகட்டத்தில் தான் நம் உடலுக்கு எண்ணற்ற உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

மழை நிற்காமல் பெய்யும்போது, காற்றில் ஈரப்பதம் அதிகமாகி, சூழலையும் ஈரமாக்கி, உங்கள் கண்களுக்கு அது ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. இதனால் கண்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உங்கள் கண்களை பாதுகாக்க சில மழைக்காலத்தில் நீங்கள் என்னசெய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கூரான பார்வைக்கும் உதவும் குறிப்புகள்.

சன் கிளாஸ்கள்

உங்கள் கண்களை புறஊதாக்கதிர்கள் தாக்கக் கூடும். அவை உங்கள் கண்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். உங்கள் கண்களை புறஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பதன் மூலம் நீங்கள் உங்கள் கண் ஆரோக்கியத்தை பேணலாம். அதற்கு நீங்கள் கண்களில் கண்ணாடி அதாவது சன் கிளாஸ்கள் அணிந்துகொள்ளவேண்டும். இதனால் உங்களுக்கு கண் புரை நோய் மற்றும் பல கண் பிரச்னைகள் ஏற்படாது.

நல்ல சுகாதாரத்தை பேணுங்கள்

மழைக்காலத்தில் உங்களை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் முழு உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. எனவே உங்கள் கண்கள் மற்றும் முகத்தை சுத்தமில்லாத கைகளால் தொடுவதை தவிர்க்கவேண்டும். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். இதனால் உங்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவது தடுக்கப்படும். இதனால் உங்கள் கண்களில் தொற்றுகள் ஏற்படும். எனவே கண்களை எப்போது தொடமல் இருப்பது நல்லது.

வறண்ட கண்கள்

உங்கள் கண்கள் வறண்டு காணப்பட்டால், போதிய ஈரப்பதமூட்டிகளை பயன்படுத்துங்கள். குறிப்பாக வீடுகளுக்குள் இருக்கும்போது, வெளியே குளிராக இருந்தால் உங்களுக்கு இந்த ஈரப்பதமூட்டிகள் உதவக்கூடும். உங்கள் கண்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். உங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவதன் மூலமும் உங்கள் கண்களை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளலாம்.

கண்களை தேய்க்காதீர்கள்

உங்கள் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால், கைகளால் அதை தேய்க்காதீர்கள். இதனால் உங்கள் கண்களில் கிருமிகள் தொற்றுகள் ஏற்படும். உங்களுக்கு நோய்கள் வராமல் தடுக்கும். நேரடியாக துடைக்காமல் துண்டு அல்லது சுத்தமான டிஸ்பூ பேப்பர் வைத்து உங்கள் கண்களை துடைத்து விடுங்கள். இதனால் உங்கள் கண்களில் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் அசவுகர்யங்கள் சரியாகும்.

கண் சொட்டு மருந்துகள்

மழைக்காலத்தில் உயரும் குளிரால் உங்கள் கண்களில் வறட்சி ஏற்படலாம். எனவே உங்கள் கண்களில் ஈரப்பதத்தை தக்கவைக்க, கண் சொட்டு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாங்கி வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். 

இதனால் உங்கள் கண்களில் வறட்சி குறையும். இந்த கண் சொட்டு மருந்துகள் உங்கள் கண்களை சுத்தம் செய்யவும் உதவும். உள்ளுக்குள் ஏதேனும் இருந்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினால், உங்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்க இந்த கண் மருந்துகள் உதவும்.

நீர்ச்சத்துடன் இருங்கள்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்துக்கும் அதிக தண்ணீர் பருகுவது நல்லது. இதனால் உங்கள் கண்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது. உங்கள் கண்களில், ஈரப்பதத்தை சரியாக வைத்திருப்பதன் மூலம், நீங்கள் கண்களில் வறட்சி மற்றும் எரிச்சலை தவிர்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்

கண் ஆரோக்கியத்துக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு என்பது மிகவும் முக்கியம். ஒமேகா 3, வைட்டமின் சி, ஏ மற்றும் இ அதிகம் நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். 

இந்த முக்கிய வைட்டமின்கள் கீரை, கேரட், ஆரஞ்சு பழங்கள் மற்றும் மீன் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உங்கள் கண்களில் வயது தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் கண்களின் பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

திரை நேரத்தை குறையுங்கள்

திரை நேரத்தை குறைக்க வேண்டியது, மிகவும் அவசியம். அதிகப்படியான திரை நேரம் என்பது உங்களுக்கு தலைவலியையும், கண் பார்வைத்திறன் குறைபாட்டையும், வறண்ட கண்களையும் ஏற்படுத்தும். எனவே 20-20-20 விதியை பின்பற்றுங்கள். அதாவது கண் பாதுகாப்பில் இந்த விதி என்பது திரையை 20 நிமிடங்கள்தான் பார்க்கவேண்டும். 

இடையில் 20 நொடிகள் இடைவெளிவிட்டு, கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இந்த இடைவெளியில் 20 அடி தொலைவில் இருந்து மட்டுமே திரையை கவனிக்கவேண்டும். நீங்கள் தொடர்ந்து திரையில் பணிபுரிபவராக இருந்தால், இதை பயன்படுத்துங்கள்.

கண் செக்அப்கள்

உங்கள் கண் பார்வையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா அல்லது கண் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வுகள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கண் பார்வை திறனை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம். உங்கள் கண்களில் ஏற்படும் பிரச்னைகளை முன்னதாகவே கண்டுபிடிப்பது உங்களுக்கு அந்த பிரச்னைகள் கடுமையாகாமல் தடுக்க உதவும். அவற்றை தெரபி, சிகிச்சைகள் அல்லது இயற்கை முறையிலே கூட எளிதாக தீர்த்துவிடமுடியும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.