தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Eye Care Corrects Eye Sight Deficiency Just Eat A Handful Of This Every Day

Eye Care : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! தினமும் ஒரு கைப்பிடியளவு இதை மட்டும் சாப்பிடுங்க!

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 01:27 PM IST

Eye Care : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! தினமும் ஒரு கைப்பிடியளவு இதை மட்டும் சாப்பிடுங்க!

Eye Care : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! தினமும் ஒரு கைப்பிடியளவு இதை மட்டும் சாப்பிடுங்க!
Eye Care : கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும்! தினமும் ஒரு கைப்பிடியளவு இதை மட்டும் சாப்பிடுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

கண் பார்வைத்திறனை அதிகரிக்கு ட்ரை ஃப்ரூட்ஸ்

ஒருவரின் கண்பார்வை மிகவும் நன்றாக இருப்பது அவசியம். ஏனெனில், இந்த காலங்களில் நாம் அதிகளவு திரையை பார்க்கிறோம். இதனால் கண் பார்வைத்திறனை நாம் சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம். 

கண் பார்வையை அதிகரிக்கும் கேரட் தவிர, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ட்ரை ஃப்ரூட்ஸ்களும் உங்களின் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்களின் கண் பார்வையை பாதுகாக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது சுவை நிறைந்தது.

பாதாம்

உங்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஒமகோ 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. கண்களை பாதுகாத்து, வயோதிக்கத்தால் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்கிறது. கண் பார்வை செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

வால்நட்

வால்நட்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது கண்களின் ரெட்டினாவுக்கு நல்லது. அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானது. இதை அடிக்கடி எடுத்துக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. வயது தொடர்பான கண் கோளாறுகளை தடுக்கிறது.

முந்திரி

இதில் அதிகம் உள்ள சிங்க் சத்துக்கள் கண் ரெட்டினாவின் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது. கண் பார்வையை கூர்மையாக்குகிறது. உங்கள் உணவில் முந்திரிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது, கண்களில் ஏற்படும் அழிவுகளை சரிசெய்கிறது. கோளாறுகளுக்கு எதிராக போராடுகிறது.

திராட்சைகள்

திராட்சைகளில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள பாலிஃபினால்கள், கண்களில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை சரிசெய்கிறது. இது உங்களின் கண் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது. செல்களின் சேதத்தையும் தவிர்க்கிறது.

ஆப்பிரிக்காட்

ஆப்பிரிக்காட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. ஆப்பிரிக்காட், உடல் பீட்டா கரோட்டின்களை வைட்டமின் ஏஆக மாற்ற உதவுகிறது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது.

உலர் ப்ளூபெரிகள்

ஆந்தோசியானின் என்ற சக்தி அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளது. இது கண் பார்வை திறன் அதிகரிக்க நல்லது. இவை ப்ளூபெரியில் அதிகம் உள்ளது. இதுவும் கண்களின் ரெட்டினா சேதமடைவதை தடுக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

பேரிட்சைப்பழம்

இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கண்களின் ஆரோக்கியத்துக்கு பேரிச்சை பழம் மிகவும் நல்லது. கண்களில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கிறது.

பிரசில் நட்ஸ்

பிரசில் நட்ஸில் அதிகளவில் செலினியம் உள்ளது. இது கண்களை பாதுகாக்கும் மிக முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது கண்களில் ஏற்படும் அழுத்தத்தை சரிசெய்கிறது. இந்த நட்ஸ்களை சாப்பிடுவது உங்களுக்கு கண் பார்வை நன்றாக இருக்க உதவுகிறது.

இவையனைத்திலும் ஒன்றிரண்டு எடுத்து ஒரு கைப்பிடிளவு தினமும் சாப்பிடுங்கள். ஏனெனில் நட்ஸ்களில் எது எடுத்துக்கொண்டாலும் உங்கள் கையில் ஒரு பிடியளவுதான் சாப்பிட வேண்டும். அதுதான் உங்கள் உடலுக்கான சரியான அளவு. இதை முறையாக எடுத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்டுத்துங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்