Extramarital Affairs : அலட்சியம் வேண்டாம் பாஸ்.. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணங்கள்!
Extramarital Affairs :

Realationship: சிலர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளால் குடும்பத்தை சீரழித்து வருகின்றனர். சில காரணங்களுக்காக இத்தகைய உறவுகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் அவர்களது குடும்பம் பெரும் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. தாம்பத்திய வாழ்வில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே விலகி விடுவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இதனால், தகாத உறவுகள் அதிகரிப்பது மட்டுமின்றி, பல சம்பவங்களில் கொலைகளும் நடக்கின்றன. திருமணத்திற்கு புறம்பான உறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
விவாகரத்து பொதுவானது
திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை இந்தியர்கள் அதிகம் ஏற்றுக்கொள்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் திருமணம் என்பது நிரந்தர பந்தமாக இன்று பார்க்கப்படுவதில்லை. தம்பதியர் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் விவாகரத்து பொதுவானது. பெரும்பாலான மக்கள் சில காரணங்களுக்காக மற்றவர்களுடன் உறவில் இருக்க விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்ப்பில் தெரிய வந்துள்ளது.