World Couples Day : இன்று என்ன நாள் தெரியுமா? உங்கள் காதலை வெளிபடுத்துங்கள்.. சர்வதேச தம்பதியர் தினம் இன்று!
World Couples Day : பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும், கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
World Couples Day : திருமணம் என்பது அனைவரது வாழ்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த ஒரு நாள் மட்டும் சிறப்பான நாளாக இருக்கும். நாள், நட்சத்திரம் பார்த்து பெண் பார்ப்பதில் தொடங்கி, கெட்டி மேளம் முழங்க, அக்னி சாட்சியாக தாலி கட்டும் அந்த நிகழ்வை மணமக்கள் இருவரும் வாழ்க்கை முழுக்க ஒரு போதும் மறக்க முடியாது.
எப்போது நினைத்து பார்த்தாலும் மலரும் நினைவுகளாக மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். திருமண வாழ்க்கை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கு இடையேயான புதிய வாழ்க்கை தொடக்கம் என்று கூட சொல்லலாம். மணமகன், மணமகள் இணைவது மட்டுமின்றி, எங்கெங்கோ பிறந்த இருவரின் குடும்பமும் ஒன்றாக இணையும் தருணம் அது.
பாரம்பரிய கலாசார முறையிலேயே திருமணம்
புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என வாழ்க்கை வட்டம் பெரிதாகும். நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவரும் தங்கள் பாரம்பரிய கலாசார முறையிலேயே திருமணத்தை நடத்துகின்றனர்.
இன்று பெற்றோர் காதலை அங்கீகரிக்கும் மனப்பக்குவமும் வளர்ந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப திருமணத்தை கொண்டாடுகின்றனர். காதல் கல்யாணமோ, கல்யாணத்திற்கு பிறகு காதலோ நம் திருமண சடங்குகளுக்கு இருக்கும் கலாசாரம், பாரம்பரிய விதிகள் மாறவில்லை. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து செல்லுதல், கோபமின்மை, ஒவ்வொரு நாளையும் தங்கள் திருமண நாள் போல் எண்ணி அளவில்லா காதலுடன், குழந்தைகளுடன் தங்கள் வாழ்க்கையை பயணிப்பதிலேயே இருக்கிறது சுவாரஸ்யங்கள்.
உலக தம்பதியர் தினம்
உலக அளவில் பல சம்பவங்களின் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகிறது. எல்லா தினங்களையும் நாமும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. திருமணமான தம்பதிகள் தங்கள் மணநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதுதவிர தம்பதியர் தங்கள் வாழ்க்கையில் இணைந்த தருணம், இதுவரை பயணித்து வந்த வாழ்க்கை பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'மே 29 ல் உலக தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
பெற்றோர் ஜாதகம், குடும்பம் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், இரு மனங்கள் ஒன்றிணைந்து செய்த காதல் திருமணமாக இருந்தாலும், கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
திருமண பந்தம் என்பது எந்த சூழ்நிலையிலும் கண்வன் -மனைவி இருவரும் விட்டு கொடுக்காமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம்விட்டு பேசி வாழ்வதே. எனவே இன்றைய தினம் இங்கள் திருமண வாழ்க்கையில் நடந்த சில நினைவுகளை நினவூட்டி காதலை வெளிபடுத்தி உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை தொடருங்கள்.
உங்கள் பார்ட்னரிடம் எப்படி பச்சாதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும்?
அவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்.
அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவியுங்கள்.
நேர்மையாகவும், திறந்த மனதுடனும் உரையாடுங்கள்.
முடிவுகள் எடுக்கும்போது அவர்களின் உணர்வுகளை கணக்கில்கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை கூறுங்கள்.
இருவரும் ஒன்றாக சேர்த்து தரமான நேரத்தை செலவிடுங்கள்.
தேவைப்படும்போது நேர்மையாக மன்னிப்பு கேளுங்கள்.
ஏற்காதபோதும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
அனுதாபம், பார்ட்னரின் அவதிகளை புரிந்துகொள்வது, பச்சாதாபம் என்பது உங்கள் உறவை ஆழமாக்கவும், பலமாக்கவும் உதவும் திறவுகோல் ஆகும். அனுதாபம் பரிதாப உணர்வுகளைக்கொடுக்கும்.
பச்சாதாபம் கொள்ளும்போதுதான் உங்கள் உறவு மேலும் பலமடைகிறது. புரிதலை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஆறுதலைக்கொடுக்கிறது. உங்கள் உறவை வலுவாக்கவும் உதவுகிறது.
டாபிக்ஸ்