Exclusive : ப்ராஸ்டேட் புற்றுநோயால் அவதியா; நவீன ரோபாடிக் அறுவைசிகிச்சை வந்துவிட்டது – மருத்துவர் விளக்கம்!
ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு தரப்படும் நவீன ரோபாடிக் சிகிச்சை குறித்து அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மைய சிறப்பு நிபுணர் ஸ்ரீவத்சன் அறிவுறுத்துகிறார்.
ஸ்ரீவத்சன், அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் மையத்தின், சிறுநீரகயியல் மற்றும் சிறுநீரக புற்றுநோயியல் சிறப்பு நிபுணர், உங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுவதை ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது எப்படி? ப்ராஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் நவீன நுட்பங்கள் என்ன ஆகியன குறித்து பேசியுள்ளார்.
ப்ராஸ்ரேட் புற்றுநோயை துவக்கத்திலே கண்டுபிடிப்பது எப்படி?
கடந்த காலங்களில் ப்ராஸ்டேட் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பாமலே போயுள்ளது. ஏனெனில் இதன் அறிகுறிகள் பெரும்பாலும் வயோதிகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஆண்கள் நோய் கண்டறிவதை தவிர்த்தது, இது நோயை ஆரம்ப காலத்திலே கண்டுபிடிப்பதில் மிகவும் முக்கியமானதாகும். ப்ராஸ்டேட் புற்றுநோயை ஆரம்ப காலத்திலே கண்டுபிடிக்க ப்ராஸ்டேட் ஸ்பெஷிஃபிக் ஆன்டிஜென் பரிசோதனை உள்ளது. இது ஒரு சாதாரண ரத்த பரிசோதனைதான். இது ப்ராஸ்டேட் புற்றுநோய் கண்டறிதலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த பரிசோதை ஆங்கிலத்தில் சுருக்கமாக பிஎஸ்ஏ என்று அழைக்கப்படுகிறது.
1980ம் ஆண்டு இந்த பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இது ஒரு சிறந்த நோய் கண்டறியும் கருவியாக உள்ளது. ப்ராஸ்டேட் புற்றுநோய் அதன் துவக்க நிலைகளாக 1 அல்லது 2வது கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபட முடியும். ஆனால் தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அதில் உள்ள சவால்கள் அதிகமாக இருக்கும்.
ப்ராஸ்டேட் புற்றுநோய் கண்டுபிடிப்பதில் பிஎஸ்ஏ பரிசோதனையின் பங்கு
பிஎஸ்ஏ பரிசோதனை என்பது ப்ராஸ்டேட் புற்றுநோயை கண்டுபிடிப்பதில் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இந்த சோதனைகள் மட்டும் அந்தப் புற்றுநோயை உறுதிப்படுத்திலிடாது. பிஎஸ்ஏ அளவு ஒரு நோயாளிக்கு அதிகம் இருந்தாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பயாப்ஸி என்ற கூடுதல் பரிசோதனை செய்துதான் அது ப்ராஸ்டேட் புற்றுநோயா என்பதை கண்டுபிடிக்கவேண்டும். பிஎஸ்ஏ பரிசோதனை என்பது முக்கியமான ஆரம்ப புள்ளியாகவும், அது மருத்துவர்களை தொடர்ந்து அதுகுறித்து உற்றுநோக்கவும் உதவுகிறது. அதன் முடிவுகளில் பிரச்னைகள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.
ரோபாடிக் அறுவைசிகிச்சை
ரோபாடிக் அறுவைசிகிச்சை என்பது அண்மைக்காலத்தில் வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பமாகும். அறுவைசிகிச்சையில் ரோபாடிக் முறைகள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய அறுவைசிகிச்சைகளைப்போலன்றி, ரோபாடிக் கரங்கள் 360 டிகிரி சுழலும் என்பதால் ஆண்களின் குறுகலான இடுப்பில் கூட சிறப்பான முறையில் சிகிச்சை செய்யமுடிகிறது. இதில் உள்ள முப்பரிணாம கேமரா அறுவைசிகிச்சை செய்யப்படும் இடத்தை துல்லியமாகக் காட்டும். அங்கிருந்து நீங்கள் கட்டியை துல்லியமாக அகற்ற முடியும். இதனால் புற்றுநோய் கட்டுக்குள் இருக்கும். அதிகளவு வெற்றிகரமான சிகிச்சையை நோயாளிகளுக்குத் தரும்.
ரோபாடிக் அறுவைசிகிச்சையின் நன்மைகள்
புற்றுநோய் திசுக்களை கண்டுபிடித்து துல்லியமாக அகற்றுவதற்கு மட்டும் ரோபாடிக் அறுவைசிகிச்சைகள் உதவவில்லை. மேலும் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது. சிக்கல்கள் குறைவு, வலி குறைச மற்றும் குறுகிய காலமே மருத்துவமனையில் தங்கவேண்டும். விரைந்து குணமடைந்து உங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். இவை பாரம்பரிய அறுவைசிகிச்சை முறைகளில் சாத்தியமில்லாதது.
ரோபாடிக் சிகிச்சைக்கு தகுதியானவர்கள் யார்?
இந்த அறுவைசிகிச்சையை செய்துகொள்ள வயது ஒரு தடையல்ல, உடல் ஆரோக்கியம் இருந்தால் 90 வயதானவருக்கு கூட செய்யமுடியும். இந்த சிகிச்சை முறைக்கு அதிகம் செலவு ஆகும் என்றாலும், இதற்கு இன்சூரன்ஸ் வழங்கினால் செலவை குறைத்துக்கொள்ள முடியும். எனவே எத்தனை சிகிச்சை முறைகள் இருந்தாலும், தொழில்நுட்பங்கள் உயர்ந்தாலும் மக்கள் ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்