அதிகம் தாகம் எடுக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்! கவனமாக இருங்கள்! முழு தகவல் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிகம் தாகம் எடுக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்! கவனமாக இருங்கள்! முழு தகவல் உள்ளே!

அதிகம் தாகம் எடுக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்! கவனமாக இருங்கள்! முழு தகவல் உள்ளே!

Suguna Devi P HT Tamil
Dec 26, 2024 01:52 PM IST

ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் அளவவுள்ள தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் உடலின் சீரான ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதிகம் தாகம் எடுக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்! கவனமாக இருங்கள்! முழு தகவல் உள்ளே!
அதிகம் தாகம் எடுக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்! கவனமாக இருங்கள்! முழு தகவல் உள்ளே! (Pexel)

அதிக தாகம் 

இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக தாகத்தால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வெப்பநிலையே இதற்கு பொதுவான காரணியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனக கூறப்பட்டுள்ளது. எனவே இது போன்ற அடிக்கடி தாகம் எடுக்க கூடியவர்கள் உடனடியாக மருதுவரை கலந்து ஆலோசிப்பது ஒரு முன்னெச்சரிக்கை செயலாகும். எனவே இதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 

அடிக்கடி தாகம் ஏற்படும் இந்த நிலை பாலிடிப்சியா என்று அழைக்கப்படுகிறது. நீரிழப்பே பாலிடிப்சியாவின் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பாலிடிப்சியா முன் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ரீடியாபயாட்டீஸ்

ப்ரீடியாபயாட்டீஸ் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒரு நிலை ஆகும். இருப்பினும், இது நீரிழிவு நோயாக இருக்காது. நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படுவது போன்ற வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. ப்ரீடியாபயாட்டஸில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​​​உடல் அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் மூலம் அகற்ற முயற்சிக்கிறது. இது ஒரே நேரத்தில் உடலில் நீர் இழப்புக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி தாகம் ஏற்படுகிறது. 

ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு ரெட்டினோபதி, நரம்பியல், சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற சிக்கல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் பருமன் உள்ளவர்கள், நெருங்கிய உறவினர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் பாதிக்கும் ஆபத்து அதிகமாகும். இன்றைய இளைஞர்கள் இடக்கில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்க கூடிய காரணிகளை கண்டறிந்து உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பநிலை சமநிலையில் சீரான அளவில் நம் உடலில் பாராமரிக்கப்படும். இதில் விழிப்புணர்வோடு இருப்பது பல பெரிய தொல்லைகளில் இருந்து விடுபட உதவும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.