Exam Tips : மாணவர்களே, தேர்வில் 100க்கு 100 வாங்கவேண்டுமா? கவனம் சிதறாமல் படிக்க குறிப்புகள் இதோ!
Exam Tips : மாணவர்களே தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கவேண்டுமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

உங்கள் தேர்வுகளுக்கு தேவையான குறிப்புகள்
நீங்கள் ஆன்லைன் வகுப்புக்களில் படிக்கிறீர்கள் அல்லது வழக்கமான பள்ளிக்கூடத்துக்கு சென்று நேரடியாக கல்வி கற்கிறீர்கள் என எதுவாக இருந்தாலும், இந்த 8 குறிப்புகள் உங்களுக்கு உதவும். இது உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவும். உங்களின் திறனை அதிகரிக்கும். உங்களின் தேர்வு தயாரிப்புக்கள் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல உதவும் குறிப்புகளாகும். இதனால் நீங்கள் எப்படி படித்தாலும் அதற்கு முழு பலனும் கிடைக்கச் செய்யும். எனவே நீங்கள் இந்த குறிப்புக்களைப் பின்பற்றுங்கள். படித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
கவனமுடன் படிக்க தேவையான சூழல்
நீங்கள் படிக்கும் இடம் அமைதியான இடமாக இருக்கவேண்டும். அங்கு உங்களை தொந்தரவு செய்யும் எந்த விஷயமும் இருக்கக்கூடாது. உங்களின் பணியிடத்தை நீங்கள் ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ளவேண்டும். அங்கு எவ்வித இடையூறுகளும் இருக்கக்கூடாது. உங்கள் ஃபோனை அனைத்து வைத்துவிடவேண்டும். அறிவிப்புகள் வருவதை டிஸேபிள் செய்து வைத்துவிடவேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் படிக்கிறீர்கள், தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டு, தனிமையில் அமர்ந்து படிக்கவேண்டும்.
திட்டம் மற்றும் அட்டவணை
நீங்கள் படிக்கும் பாடங்களை பிரித்துக்கொள்ளவேண்டும். உங்களால் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க முடிந்த அளவாக அதை பிரித்துக்கொண்டு படிக்கவேண்டும். நீங்கள் போடும் அட்டவணை சரியானதாக இருக்கவேண்டும். எனவே குறிப்பிட்ட நேர அட்டவணைகளை ஒவ்வொரு பாடத்துக்கும் என நீங்கள் பிரித்துக்கொடுப்பது மற்றும் அதை சரியாக படித்து முடிப்பது மிகவும் அவசியம். எனவே நீங்கள் எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதிக பாடங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கஷ்படக்கூடாது. முடிந்த அளவு பிரித்துக்கொள்ளவேண்டும். அதில் வளர்ச்சியும் சரியான முறையில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
மீண்டும் மனதில் கொண்டு வருவது
நீங்கள் படித்த விஷயங்களை மீண்டும், மீண்டும் உங்கள் மனதில் கொண்டு வந்து உங்களை சோதித்துக்கொள்ளவேண்டும். அதற்கு ஃப்ளாஷ் கார்டுகள், கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுவது என அடிக்கடி பயிற்சி தேவை. கடந்த ஆண்டு வினாத்தாள் மேலும் பல வினாத்தாள்களில் உள்ள கேள்விகளை படிக்கவேண்டும். நீங்கள் புரிந்துகொண்டதை மீண்டும் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் மற்றவர்களுக்கு பாடங்களை விளக்கவேண்டும். அதில் உள்ள முக்கிய ஐடியாக்களை தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்களின் அறிவு திறம்படும்.
தேநீர் இடைவெளி
பொமொடொரொ டெக்னிக் என்பதை பயன்படுத்துங்கள். அதாவது 25 நிமிடங்கள் படிப்பு, 5 நிமிட இடைவெளி என்பதுதான் அது. இந்த இடைவெளியில் உங்களுக்கு புத்துணர்வு தரும் விஷயங்களை செய்யுங்கள். நடைப்பயிற்சி, இசையை கற்பது அல்லது மிதமான உடற்பயிற்சி, இவையெல்லாம், நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு கவனத்தை அதிகரிக்க உதவும்.
மூளைக்குத் தேவையான ஆற்றல்
உங்கள் மூளைக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள். உணவாகட்டும் அல்லது ஸ்னாக்ஸ் ஆகட்டும் எதுவாக இருந்தாலும், அவை ஆரோக்கியமானதாக மட்டுமே இருக்கட்டும். அதுதான் உங்கள் மூளைக்கு நல்லது. சர்க்கரை உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அதிகம் தண்ணீர் பருகுங்கள். அதிக சர்க்கரை உணவுகள் உங்கள் மூளையின் ஆற்றலை இழக்கச்செய்யும். உங்களுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். அதிகம் காபி பொருட்களை உட்கொள்ளாதீர்கள். இதனால் பதற்றம் அதிகரிக்கும். உறக்க இடையூறுகள் அதிகம் ஏற்படும்.
உறக்கத்துக்கு முன்னுரிமை
தினமும் இரவில் 7 முதல் 9 மணி நேர உறக்கம் கட்டாயம் என்பதை உறுதியாகப் பின்பற்றுங்கள். நீங்கள் உறங்கச் செல்லும் நேரம் முறையாக இருக்கவேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களிலும் அது சரியானதாக இருக்கவேண்டும். உங்கள் உடலின் உள்புற கடிகாரத்தை சரியாக இயங்கச் செய்யுங்கள். உறங்குவதற்கு முன்னர், உங்களை அமைதிப்படுத்தும் வழக்கம் வேண்டும். இது உங்களின் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். உங்களின் கவனத்தையும் அந்த நாளில் சிதறவிடாமல் காக்கும்.
மனநிறைவு மற்றும் ஓய்வு
நீங்கள் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியைப் பின்பற்றுங்கள். இது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். இதனால் உங்களின் கவனம் தானாவே அதிகரிக்கும். தியானம், சில நிமிடங்கள் செய்வது கூட பலன் தரும். இது உங்களின் மனதில் தெளிவைக் கொண்டுவரும். உங்களின் கவனத்தை மேம்படுத்தும். தேர்வில் உங்களிடம் வெற்றி வருவதை மனதில் எண்ணி மகிழுங்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களின் அச்சத்தைக் குறைக்கும்.
உதவி
உங்களுக்கு கடினமாக உள்ள டாபிக்குகளைப் படிக்க நீங்கள், குழுவாக கற்க முயற்சியுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டு உற்சாகமாகப் படியுங்கள். நீங்கள் அதிகமாக உணரும்போது, மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள், நண்பர்கள் அல்லது ஆசிரியர் அல்லது பெற்றோர் என யாருடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் உங்களால் மனஅழுத்தத்தை முறையாகக் கையாள முடியும். உங்களுக்கு புதிய கோணமும் கிடைக்கும்.

தொடர்புடையை செய்திகள்