தேர்வுகால குறிப்புகள் : மாணவர்களே படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்கவேண்டுமா? இதோ சுவாரஸ்யமான வழிகள்!
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும்போது உங்களின் கவனத்தை அதிகரிக்கவேண்டுமா? எனில் அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும். அதற்கான சுவாரஸ்யமான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் கவனத்தை அதிகரிப்பது என்பது முக்கியமான அங்கமாகும். மாணவர்கள் அவர்களின் கவனத்தை அதிகரிக்க சில விஷயங்களை கடைபிடிக்கவேண்டும். அவர்கள் படிப்பதற்கு என்று தனியான ஒரு இடத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் எப்போது விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கவனச்சிதறல்கள் ஏற்படாமல் அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது இடைவெளி எடுத்துக்கொண்டு படிக்கவேண்டும். மூளைக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் சரியான அளவு உறங்குவதை அவர்கள் உறுதி செய்யவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
நினைவாற்றல் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
உங்களுக்கு தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் பாடல்கள், ரைம்ஸ்கள் போன்ற எளிய நினைவாற்றல் முறைகளை கடைபிடிக்கவேண்டும். இந்த நுட்பங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். படிக்கும்போது இவை உங்களுக்கு விரிவான பதில்களை படிக்கும்போது அவற்றை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். குறிப்பிட்ட சில முக்கிய பாயின்ட்களை நீங்கள் படித்து வைத்துக்கொள்ளவேண்டும். அதை வைத்து நீங்கள் விளக்கத்தை விளக்கமாக எழுதிவிடவேண்டும்.
கவனம்
நீங்கள் படிக்கும்போது ஆழ்ந்து படிக்கவும், கணித பாடங்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், நீங்கள் உங்கள் ஃபோனை ஏரோப்ளேன் மோடில் போட்டுவிடவேண்டும். அமைதியான ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அமர்ந்து படிக்கவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புடன் அந்த இடத்தில் அமர்ந்து படிக்கவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படிக்கவேண்டும். குறிப்பாக நீங்கள் எவ்வித இடையூறுமின்றி படிக்கவேண்டும்.
டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்
கோகோவை சாப்பிடும்போது அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இது உங்கள் உடலுக்கு இயற்கை ஆற்றலைக் கொடுக்கிறது. இதில் ப்ளாவனாய்ட்கள் உள்ளன. இதில் கொஞ்சமான அளவில் உள்ள காஃபைன் உங்கள் மூளையை கூராக்கும். உங்களுக்கு தெளிவையும், கவனத்தையும் அதிகரிக்கும்.
இடைவெளிகள்
நீங்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் படித்துவிட்டு, பின்னர் கட்டாயம் ஒரு இடைவெளியை எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே சென்றால் அது உங்களை மனதளவில் அதிகப்படியாக உணரச்செய்யும். உங்களின் கவனத்தை குறைக்கும். நீங்கள் இடைவெளி எடுக்கும்போது, பாட்டு கேட்கலாம் அல்லது மெல்ல நடந்து செல்லலாம். இது உங்களின் கவனத்தை அதிகரிக்கும். உங்களின் மனதை தெளிவாக்கும்.
முகத்தை கழுவவேண்டும்
ஒவ்வொரு 25 நிமிடம் முதல் 30 நிமிடத்துக்கு ஒருமுறை நீங்கள் முகத்தை கழுவவேண்டும். ஜில்லென்ற தண்ணீரை முகத்தில் ஊற்றி கழுவும்போது, அது உங்களின் கவனத்தை அதிகரிக்கும். இந்த எளிமையான சக்திவாய்ந்த பழக்கம், தற்காலிகமாக உங்களின் உணர்வுகளை விழிக்கச் செய்யும். மனச்சோர்வைப் போக்கும். உங்கள் மூளையை எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள உதவும்.
உறக்கத்துக்கு முக்கியத்துவம்
மாணவர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பார்கள். ஆனால் இந்தப்பழக்கம் மெல்லமெல்ல அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். தரமான உறக்கம் உங்கள் மனதை கூராக்கும். உறக்க கோளாறுகள் இருந்தால், அது உங்களின் கவனிக்கும் திறனைக் குறைக்கும். நினைவாற்றலை குறைக்கும். இது அவர்களின் கிரிட்டிக்கல் சிந்தனைகளையும் தடுக்கும்.
இயற்கையுடன் இணைந்திருங்கள்
உங்கள் கவனத்தை இயற்கையாக நீங்கள் அதிகரித்துக்கொள்ள தோட்டத்தில் சிறிது தூரம் நடக்கலாம். நீங்கள் படிக்கும் இடத்தில் தொட்டிகளை வைத்து வளர்க்கலாம். இது உங்கள் மனதுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ஒரு செடியை நட்டு வளர்ப்பது மற்றும் அது வளர்வதை பார்க்கும்போது, அது உங்களுக்கு நாளடைவில் மனத்தெளிவை ஏற்படுத்தும்.
ஸ்டிக்கி நோட்ஸ்
நீங்கள் ஸ்டிக்கி நோட்ஸை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவல்களை குறிப்புக்களாக எழுதி ஒட்டிவைத்துக்கொள்ளலாம். முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்களையும் அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்க.ள முக்கிய தேதிகள், ப்ரொஜெக்ட்கள் முடிக்கவேண்டிய நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதை உங்களுக்கு தெரியும் இடத்தில் மாட்டிவிடுங்கள். இவை உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவும். நீங்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டிய விஷயங்களை அது நினைவூட்டும். நாள் முழுவதும் உங்களின் அட்டவணையை அது தெளிவாக உங்களுக்கு அறிவுறுத்தும்.
