Exam Tips : அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த 6 டெக்னிக்குகளை செய்கிறார்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exam Tips : அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த 6 டெக்னிக்குகளை செய்கிறார்கள்!

Exam Tips : அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த 6 டெக்னிக்குகளை செய்கிறார்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 09:37 AM IST

தேர்வுக்கு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முதலிடம் பெறும் மாணவர்கள் என்ன டெக்னிக்குகளை கடைபிடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

Exam Tips : அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த 6 டெக்னிக்குகளை செய்கிறார்கள்!
Exam Tips : அதிக மதிப்பெண்கள்; தேர்வுக்கு விழுந்து விழுந்து படிப்பதில்லை; அவர்கள் இந்த 6 டெக்னிக்குகளை செய்கிறார்கள்!

அவர்களின் தலையணைக்கு கற்றுக்கொடுப்பது

ஆம், உண்மைதான், முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சிக்கலான பாடங்களை சில பொருட்களிடம் குறிப்பாக தலையணைக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதாவது எதிரில் ஒரு நபர் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுபோது செய்து அதை இவர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த பொருட்கள் கண்ணாடி, பொம்மைகள், தலையணை என மாறுபடுகிறது. இந்தப் பழக்கம் அவர்களக்கு தாங்கள் படிக்கும் பாடத்தை எளிமையாக்கிக்கொண்டு, தெளிவாக விளக்க உதவுகிறது. அவர்களின் புரிதலை மேம்படுத்துகிறது. ஒருவருக்கு கற்றுக்கொடுப்பது சிறந்தது. ஆனால் யாரும் இல்லை என்ன செய்ய முடியும். எனவே அவர்கள் இதுபோன்ற ஒரு டெக்னிக்கை கடைபிடிக்கிறார்கள். இந்த உயிரற்ற பொருட்கள் உங்களிடம் பொறுமையாக பாடம் கற்கும்தானே.

எழுதுவது, டைப் செய்வது கிடையாது

லாப்டாப்கள் மற்றும் டேப்களின் காலத்திலும், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பள்ளியில் கைகளால் எழுதி பாடம் படிக்கும் பழைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பாடங்களை கைகளால் எழுதி, படிப்பது உங்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இந்த பழக்கம் அவர்களுக்கு நன்றாக படிக்க உதவும். மேலும் அதற்காக சிலவற்றை அவர்கள் வரைந்தும் கற்றுக்கொள்ள முடிகிறது.

இடைவெளி

படிக்கும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை இடைவெளி அவசியம். அப்போது யாரும் நம்மை பார்க்கவில்லை என்பதுபோல் டான்ஸ் ஆடவேண்டும். மேலும் குதிக்க வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மூளையை எப்படி மாற்றிக்கொள்ளவேணடும் என்பது தெரியும். இந்த இடைவெளிகளில் அவர்களின் கவனம் மேம்படுகிறது. அவர்களின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. அவர்கள் தாங்கள் படிக்கும் நேரத்தை தொடர்ந்து அதிகரிக்க முடிகிறது. நல்ல முறையில் படிக்கவும் முடிகிறது.

கடிகாரத்தை தலைகீழாக மாற்றுவது

இது மிகவும் காமெடியான பழக்கமாகும். சில மாணவர்கள் அவர்களின் கடிகாரதத்தை தலைகீழாக மாற்றி வைக்கிறார்கள் அல்லது படிக்கும்போது படிக்கும் நேரத்தை மறைத்து வைக்கிறார்கள். ஏன் தெரியுமா? இது, கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் அவர்களின் மனநிலையை மாற்றி அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் அவர்களால் முழுமையாக கவனத்துடன் படிக்க முடிகிறது. இதனால் அவர்கள் படிப்பில் மட்டும் முழு கவனமும் செலுத்துகிறார்கள். இந்த டெக்னிக் குறிப்பாக அவர்களுக்கு தேர்வுக்கு படிக்க உதவுகிறது.

மூளையை வலுப்படுத்தும் உணவுகள்

கணித பாடம் படிக்கும் முன்னர், டார்க் சாக்லேட்கள் சாப்பிடுகிறார்கள். அவர்களின் மூளையின் திறனை அதிகரிக்க நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் சாப்பிடுகிறார்கள். வெற்றியாளர்கள் மற்றும் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், மூளைக்கு உகந்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது. அவர்களின் மூளை ஷார்ப்பாகிறது. இது அவர்களுக்கு சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் அவர்கள் தவிர்க்க உதவுகிறது. படிக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது.

எந்த நேரத்திலும் படிப்பது?

இரவு நேரத்தில் ஆந்தைபோல் கண் விழித்து அல்லது காலை நேரத்தில் எழுந்து படிக்கிறார்கள். தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், இந்த உலகம் உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவர்கள் விழித்திருக்கிறார்கள். இந்த இரவு தாமதமாக விழித்திருப்பதும், அதிகாலையில் கண் விழித்து படிப்பதும், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் படிக்க உதவுகிறது. அவர்கள் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து படிக்கிறார்கள் அல்லது இரவு இரண்டு மணியைக் கடந்தும் படிக்கிறார்கள். இப்போது கிடைக்கும் அமைதி மற்றும் நிசப்தமான சூழல் அவர்களுக்கு உதவுகிறது. இது அவர்களின் கவனிக்கும் திறனை ஆச்சர்யமூட்டும் அளவுக்கு அதிகரிக்கிறது.

முயற்சிக்கத் தயாரா?

இந்த பழக்கங்களை நீங்கள் முயற்சிக்கிறீர்களா? இது ஆரம்ப காலத்தில் வித்யாசமானதாக இருக்கும். ஆனால், இவை முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இது நன்முறையில் உதவும். ஒருமுறை இந்தப் பழக்கங்களை கடைபிடித்துப் பாருங்கள். இது உங்களுக்கு எப்படி உதவுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி என்பது நமக்கு உதவுவதை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்வது. இது கொஞ்சம் காமெடியாகவே இருந்தாலும் உங்களுக்கு உகந்தது தான்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.