Things Lower your Mood : உங்கள் உற்சாகத்தை குறைக்கும்; செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான்! துரத்தும் வழிகளும் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Things Lower Your Mood : உங்கள் உற்சாகத்தை குறைக்கும்; செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான்! துரத்தும் வழிகளும் இதோ!

Things Lower your Mood : உங்கள் உற்சாகத்தை குறைக்கும்; செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான்! துரத்தும் வழிகளும் இதோ!

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 11:02 AM IST

Things Lower your Mood : உங்கள் உற்சாகத்தை குறைத்து செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான். இவற்றை துரத்தும் வழிகளையும் தெரிந்துகொண்டு வாழ்வில் பலன்பெறுங்கள்.

Things Lower your Mood : உங்கள் உற்சாகத்தை குறைக்கும்; செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான்! துரத்தும் வழிகளும் இதோ!
Things Lower your Mood : உங்கள் உற்சாகத்தை குறைக்கும்; செயல்திறனை பாதிக்கும் பழக்கங்கள் இவைதான்! துரத்தும் வழிகளும் இதோ!

மனச்சோர்வுடன் இருப்பதை தவிர்ப்பது எப்படி?

நீங்கள் மனச்சோர்வுடன் காணப்படுகிறீர்களா? நம் எல்லோருக்கும் அது சில நேரங்களில் ஏற்படும் ஒன்றுதான். எப்போதாவது மனச்சோர்வு ஏற்படுவது பொதுவான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இருந்தால் அதுகுறித்து நீங்கள் நிபுணர்களை அணுகுவதுதான் சிறந்தது. 

எப்போதாவது ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முதலில் நீங்கள் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும்.

சரிவிகித உணவு உண்ணாமை

நீங்கள் உண்ணும் உணவுக்கும் உங்களுக்கு ஏற்படும் உணர்வுக்கும் தொடர்பு உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் உணவு உங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி உங்களின் மனநிலையை மாற்றும். எனவே அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், உங்களுக்கு எரிச்சலும், சோர்வும் ஏற்படும். எனவே சரிவிகித உணவு உட்கொள்வதை நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

உறக்கம் குறைவு

நாம் சரியான அளவு உறங்கவில்லையென்றால், அது நமது, மூளைத்திறன், மனநிலை என அனைத்தையும் பாதிக்கும். போதிய உறக்கமின்மை உங்களுக்கு எரிச்சல் மற்றும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். எனவே கட்டாயம் ஒவ்வொரு இரவும், 7 முதல் 9 மணி நேர உறக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.

தொடர் மனஅழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம் இருந்தால் அடிக்கடி உங்களுக்கு மனநிலை மாற்றம் ஏற்படும். பயம், பதற்றம், மனநிலை மாற்றம் உங்களின் ஹார்மோன்களின் சமநிலையில் குறுக்கிடும். இதனால் உங்களுக்கு மனநோய்கள் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மனஅழுத்த மேலாண்மை நுட்பங்களை தெரிந்துகொண்டு அவற்றை நீங்கள் கட்டாயம் கையாள வேண்டும். அதற்கு தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்து உங்கள் மன உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஹார்மோன்கள் சமமின்மை

உங்கள் உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி அல்லது மெனோபாஸ் காலங்களில் மனநிலையில் மாற்றம் மற்றும் ஹார்மோன்களில் மாற்றம் என படாய்படுத்தும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். போதிய அளவு சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை வழக்கமாக்குங்கள்.

நீர்ச்சத்து

உங்கள் உடலில் ஏற்படும் சிறிய நீர்ச்சத்து இழப்பு கூட உங்களின் மனநிலை மற்றும் நினைவாற்றலை பாதிக்கும். எனவே நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் பருகுங்கள். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும். இது உங்கள் நடவடிக்கைகளைப் பொறுத்து மாறுபடும். உடலுழைப்பு துறையில் உள்ளவர்களுக்கு இதை விட அதிகம் தண்ணீர் தேவைப்படும். வானிலை மாற்றத்துக்கு ஏற்பவும் தண்ணீர் பருகும் அளவு மாறுபடும்.

உடற்பயிற்சி குறைவது

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி குறைவதும், மனஅழுத்தம், பயம், பதற்றம் அதிகரிப்பதற்கும் தொடர்பு உள்ளது. தினமும் 30 நிமிட உடற்பயிற்சி என்பது கட்டாயம் செய்யவேண்டியது ஆகும். எனவே நடை, மிதிவண்டி ஓட்டுவது என் உங்கள் நாளின் உடற்பயிற்சிகள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். வழக்கமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும். உங்களின் ஒட்டுமொத்த மனஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

சமூக தனிமை

மனிதர்கள் சமூகமாக வாழ்பவர்கள், அவர்கள் சமூக தொடர்பை குறைப்பது, அவர்களை தனிமை மற்றும் மனஅழுத்தத்திற்கு கொண்டு செல்லும். எனவே அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். ஃபோன் கால்கள் அல்லது வீடியோ கால்களில் அவர்களை இணைந்திருக்கவேண்டும்.

பருவநிலை மாற்றம்

பருவகாலம் மாறும்போது, குறிப்பாக சூடான கோடையில் இருந்து குளிர் வாட்டும் பனிகாலத்துக்கு மாறும்போது, ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே எப்போது இயற்கை வெளிச்சத்தில் அதிகம் இருக்க முயற்சி செய்யுங்கள். இருளும் மனஅழுத்ததை ஏற்படுத்தும். விளக்கு வெளிச்சமும் கண்களில் சோர்வை ஏற்படுத்தும். எனவே வெளியில் சென்று நேரம் செலவிடுங்கள். இவ்வாறு செய்யும்போது நீங்கள் சோர்வை உணரமாட்டர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.