Eggs and Sperms : தரமான கருமுட்டை மற்றும் வீரியமான விந்தணுக்களை பெறவேண்டுமா? இதோ இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!
Eggs and Sperms : தரமான கருமுட்டை மற்றும் வீரியமான விந்தணுக்களை பெறவேண்டுமா? இதோ இந்த ஒரு ஸ்மூத்தி போதும். உங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.
கருத்தரிப்பு
திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.
நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.
அறிகுறிகள்
கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.
பெண்களுக்கு,
35 வயதை கடந்துவிட்டால்,
40 வயதை கடந்த பின்னர்,
மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,
கருவுறுதல் கோளாறுகள்,
ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு
இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,
புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,
ஆண்களுக்கு,
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,
விறைப்புக் கோளாறுகள்,
புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,
ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்பவராக இருந்தால்,
உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,
திருமணம் முடிந்து நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டால், உடனே இந்த பானம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இவைதான் உங்களின் கருமுட்டைகளையும், விந்தணுக்களையும் வீரியமாக்கக் கூடியவை ஆகும்.
தேவையான பொருட்கள்
செவ்வாழை – 1
பேரிட்சை பழம் – 10
பாதாம் – 10 (ஊறுவைத்து தோல் நீக்கியது)
பால் – ஒரு டம்ளர்
செய்முறை
ஒரு டம்ளர் பாலில் செவ்வாழை, பேரிட்சை பழம், ஊறவைத்து உறித்த பாதாம் என அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் அடித்துக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் தேன் கலந்தும் பருகலாம். ஆனால், பேரிட்சை பழங்களே சுவையைத் தரும் என்பதால், தேன் தேவையில்லை. இதை அப்படியே பருகவேண்டும்.
இதை திருமணமான தம்பதிகள் குழந்தை பெற விரும்பினால், தினமும் உறங்கச்செல்லும் முன் பருகவேண்டும்.
இது ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் உருவாக இந்த பானங்கள் உதவும். பெண்களின் கருமுட்டை ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விந்தணுக்களில் ஏற்படும் உருவக் குறைபாட்டை சரிசெய்யும். அவை வேகமாக வெளியேறவும் இந்த பானம் உதவும்.
ஆனால் நீங்கள் திருமணம் முடிந்து கருத்தரிக்க முயற்சிக்கும்போது, இந்த பானத்தை எடுத்துக்கொள்வது உங்கள் கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கும். எனவே திருமணமான தம்பதிகள் கட்டாயம் இந்த பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்