Egg-Moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் போதும்! புரதம், இரும்பு, இரண்டும் உறுதி! இதை முயற்சி செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg-moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் போதும்! புரதம், இரும்பு, இரண்டும் உறுதி! இதை முயற்சி செய்யுங்கள்!

Egg-Moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் போதும்! புரதம், இரும்பு, இரண்டும் உறுதி! இதை முயற்சி செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2024 11:52 AM IST

Egg-Moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் மட்டும் போதும். புரதம், இரும்புச்சத்து இரண்டும் உறுதியாகக் கிடைக்கும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

Egg-Moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் போதும்! புரதம், இரும்பு, இரண்டும் உறுதி! இதை முயற்சி செய்யுங்கள்!
Egg-Moringa Poriyal : இந்த ஒரே ஒரு சைட்டிஷ் போதும்! புரதம், இரும்பு, இரண்டும் உறுதி! இதை முயற்சி செய்யுங்கள்! (jeya's cafe)

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 3 கைப்பிடி (ஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

பூண்டு – 10 பல் (இடித்தது)

பச்சை மிளகாய் – 4 (நீளமாக நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – அரை கிண்ணம்

முட்டை – 4

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்த முருங்கைக்கீரை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பெருங்காயத்தூள், உப்புத்தூள், மஞ்சள் தூள், இடித்த பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் எண்ணெய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசையவேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் இவற்றை சேர்த்து வதக்கவேண்டும். சிறிது நேரம், இந்த கலவை நன்றாக வதங்கி பச்சை வாசம் போனவுடன், 4 முட்டைகளை உடைத்து சேர்க்கவேண்டும். மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவேண்டும். உப்பு சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

நன்றாக முட்டை, முருங்கைக்கீரை பொரியலை பிரட்டிவிட்டு, முட்டை பொரிந்தவுடன் இறக்கினால் சுவையான முட்டை, முருங்கைக்கீரை பொரியல் தயார்.

ஒரே ஒரு சைட்டிஷ்ஷில் உங்களுக்கு புரதம் மற்றும் இரும்புச்சத்தக்கள் இரண்டுமே கிடைத்துவிடும். இந்தப்பொரியல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறந்தது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது

முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான முக்கிய சத்து என்றால் அது புரதம் தான் அதுதான் உடலை நன்றாக கட்டமைக்க உதவுகிறது. உடல் வலிமை மற்றும் திசுக்கள் மற்றும் தசைகளை சரிசெய்கிறது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரதச்சத்து உள்ளது.

முட்டையில் முக்கிய அமினோஅமிலங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தசைகளை நன்றாக பராமரிக்கவும், அதன் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது.

கோலீன்கள் கொண்டது.

ஒமேகா -3 நிறைந்தது.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

முட்டை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

முருங்கைக்கீரையின் நன்மைகள் 

முருங்கைக்கீரையிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதுவும் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை கட்டமைக்கவும், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. முருங்கைக்கீரையின் இரும்புச்சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படும் அனீமியாலை அடித்து விரட்டுகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டை, முருங்கைக்கீரை பொரியலை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.