Tamil News  /  Lifestyle  /  Egg Side Effects: Is There Such A Problem In Eating Eggs Every Day

Egg side Effects: தினமும் முட்டை சாப்பிடுவதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2024 10:07 AM IST

தினமும் முட்டை சாப்பிடுபவர்களிடம் சில பக்கவிளைவுகள் காணப்படுகின்றன. இந்த பக்க விளைவுகளை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தினமும் சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முட்டை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.

முட்டை
முட்டை (pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

தினமும் அவித்த முட்டையை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இது பலருக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இருப்பினும், சிலர் சிறிய பக்க விளைவுகளை அனுபவிக்கலாம். எல்லோக்கும் இப்படி நடப்பதில்லை. முட்டை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். 

தினமும் முட்டை சாப்பிடுபவர்களிடம் சில பக்கவிளைவுகள் காணப்படுகின்றன. இந்த பக்க விளைவுகளை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தினமும் சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முட்டை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. ஆனால் சிலர் இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறார்கள். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். முட்டையில் உள்ள சத்துக்கள் நமக்கு தேவையானவை. ஆனால் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளது. தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது சிலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இருதய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முட்டை ஒவ்வாமை

முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் என்ற புரதம் உள்ளது. இது பயோட்டின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாக சாப்பிடுவது பயோட்டின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். ஆனால் இந்த பிரச்சனை எல்லோருக்கும் வரும் என்று இல்லை. சிலருக்கு மட்டும் தோன்றலாம். 

முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முட்டைகளை அதிகமாக சாப்பிடுவதால் கூடுதல் கொழுப்பு சேரும். நிறைவுற்ற கொழுப்பு நுகர்வு குறைவாக அறியப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். சிலருக்கு முட்டை அலர்ஜியாக இருக்கலாம். முட்டை சாப்பிட்ட பிறகு படை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அலர்ஜியாகக் கருதப்படலாம். அத்தகையவர்கள் முட்டையை தவிர்த்து விட வேண்டும்.

தினமும் முட்டை சாப்பிடுபவர்களில் சிலருக்கு வயிற்று வலி வரலாம். இதனால் அஜீரணம், வாயு, வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும். முட்டை சாப்பிட்ட உடனேயே இது நடந்தால் அதை தவிர்ப்பது நல்லது.

முட்டையை முழுமையாக சமைக்க வேண்டும். சிலர் பச்சையாகவோ அல்லது சமைக்காத முட்டைகளையோ சாப்பிடுவார்கள். இதனால் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் உடலில் சேரும். எனவே முட்டைகளை முழுமையாக சமைக்க வேண்டும். குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள். முட்டையை முழுமையாக சமைத்து சாப்பிடுவது அவசியம்.

முட்டைகளை சரியாக சமைக்காத போதும் வீக்கம் வாந்தி வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது . புரதம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அளவாக முட்டைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது உடல் உழைப்புக்கு ஏற்றவாறு முட்டைகளை எடுத்துக் கொள்வதே சிறந்த வழி ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள எந்த பிரச்சனையும் நீங்கள் சந்திக்கவில்லை என்றால், நீங்கள் தினமும் முட்டையை சாப்பிடலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையுடன் நிறுத்துங்கள். சிலர் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை சாப்பிடுவது உடல் உழைப்பு இல்லாத போது எளிதில் உடல் எடை கூடவாய்ப்புள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்