Egg Semiya Biriyani : முட்டை - சேமியா பிரியாணி; கிச்சடி பிடிக்காதவர்களும் விரும்புவார்கள்! சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி!
Egg Semiya Biriyani : முட்டை - சேமியா பிரியாணி; கிச்சடி பிடிக்காதவர்களும் விரும்புவார்கள்! சூப்ப

பொதுவாக சேமியாவில் கிச்சடி செய்தால் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதுபோல் முட்டை சேர்த்து பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதை நீங்கள் லன்ச் பாக்ஸ்களுக்கு கட்டிக்கொடுத்துவிட்டால், அது காலியாகிவிடும். அத்தனை சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இந்த முட்டை, சேமியா பிரியாணி இருக்கும். இதை செய்வது எளிது. எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்
தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
• முட்டை – 2
• மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்
• உப்பு – கால் ஸ்பூன்
(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)
பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
• பட்டை – ஒரு சிறிய துண்டு
• கிராம்பு – 2
• பிரியாணி இலை – 1
• ஸ்டார் சோம்பு – 1
• ஏலக்காய் – 1
• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
• தக்காளி – 1
• மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
• மல்லித்தூள் – அரை ஸ்பூன்
• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
அல்லது
• பிரியாணி மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
• சேமியா – ஒரு பாக்கெட்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிமானவுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து தக்காளி சேர்த்து நல்ல குழைய வேகவிடவேண்டும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் அல்லது பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து தேவையாள அளவு தண்ணீர் சேர்த்து சேமியாவை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். தண்ணீர் வற்றி வரும்போது, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள முட்டை, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான முட்டை, சேமியா பிரியாணி தயார். உங்களுக்குப் பிடித்தால் கால் ஸ்பூன் மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம்தான். இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கும்.
இதை லன்ச் பாக்ஸ்களுக்கு கொடுத்துவிட்டால் முழுவதும் காலியாகிவிடும். இதற்கு தொட்டுக்கொள்ள பெரிதாக ஒன்றும் தேவையில்லை. தேவைப்பட்டால் ரைத்தா அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்துக்கொள்ளலாம். இதை குழந்தைகள் கட்டாயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொதுவாக சேமியாவில் செய்யப்படும் கிச்சடி பிடிக்காதவர்களும் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை சுவை கொண்டதாக இருக்கும். நீங்களே ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். காலையில் வேலை அதிகம் இருக்கும்போது, இதைச் செய்து கொடுத்து குழந்தைகளை நீங்கள் எளிதாக பள்ளிக் கிளப்பலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டிக்கும் செய்து கொடுக்கலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்