Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம்!

Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 20, 2024 12:08 PM IST

Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டவே வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம். இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம்!
Egg Rice : லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடவேண்டும் என்ற குழப்பமா? வேண்டாம் இருக்கவே இருக்கு முட்டை சாதம்!

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 3

ஏலக்காய் – 1

சாதம் செய்ய தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி - ஒரு கப் (வேகவைத்தது)

அல்லது

(வேறு ஏதேனும் வேகவைத்த சாதம்)

முட்டை – 7

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன் (உங்கள் கார அளவுக்கு தேவையானதை சேர்த்துக்கொள்ளலாம்)

அரைத்த மசாலா தூள் – சிறிதளவு

வெங்காயத்தாள் (ஸ்பிரிங் ஆனியன்) – சிறிதளவு

செய்முறை

கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.

பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும். பொன்னிறமாகி மசிந்து வரும்வரை வதக்கவேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாத்தூளை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்னர் மசாலாவை கடாயில் ஒரு பக்கமாக நகர்த்தி, பிறகு எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்.

உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிடவேண்டும்.

பின்னர் மெதுவாக கலந்துவிட்டு கடாயை மூடி 2 நிமிடம் வேகவிடவேண்டும். பிறகு அரைத்த மசாலா தூளை சேர்த்து கலந்து, கடைசியாக வேகவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால், மணமணக்கும் முட்டை சாதம் தயார்.

இதை குழந்தைகளுக்கு பள்ளிக்கு லன்ச் பாக்ஸில் கொடுத்துவிட்டால், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

முட்டையின் நன்மைகள்

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான முக்கிய சத்து என்றால் அது புரதம் தான் அதுதான் உடலை நன்றாக கட்டமைக்க உதவுகிறது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரதச்சத்து உள்ளது.

முட்டையில் முக்கிய அமினோஅமிலங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

உடலில் அதிக அடர்த்திகொண்ட லிப்போ புரதச்சத்துக்கள் என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் இயற்கையிலே வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 2 முட்டை எடுத்துக்கொண்டாலே உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 82 சதவீத வைட்டமின் டி சத்து கிட்டும்.

ஆரோக்கியமாக எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கிறது.

முட்டையில் கலோரிகள் குறைவு, புரதம் அதிகம் உள்ளதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

கல்லீரலில் சுரக்கும் கோலீன்கள், உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து. சிலருக்கு ஒரு நாளைக்கு தேவையான கோலீன்கள் கிடைக்காது. பி வைட்டமின்களைப்போல், கோலீன், செல்கள் இயங்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு நினைவாற்றல் திறன் வளரவும், பெரியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பை குறைக்கவும் கோலீன்கள் உதவுகின்றன.

ஒமேகா – 3 சிறப்பான பாலிஅன்சாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் ஆகும். முட்டையில் இயற்கையிலே ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இரண்டு முட்டையில் 180 கிராம் இந்த சத்து உள்ளது.

முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் இ, செலினிய சத்துகள் நிறைந்துள்ளது. இது கண்கள் ஆரோக்கியம் மற்றும் ரெட்டினாவின் இயக்கத்துக்கு உதவுகிறது. வயோதிகத்தால் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்கிறது.

முட்டை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.