Egg Pakoda : முட்டை பக்கோடா; உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலரச் செய்யும் ஈவ்னிங் ஸ்னாக்; இதோ ரெசிபி!
முட்டை பக்கோடா செய்வது எப்படி?

வேகவைத்த முட்டை, முட்டை போண்டா, ஆம்லேட் தான் சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டையில் பக்கோடாவும் செய்யமுடியும். அதை எப்படி செய்வது என்ற ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து சாப்பிட்டு பாருங்கள். விடவே மாட்டீர்கள். அடிக்கடி உங்கள் வீட்டில் முட்டை பக்கோடா வாசம்தான் வீசும். அத்தனை சுவையானது.
தேவையான பொருட்கள்
முட்டை – 3
மல்லித்தழை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – ஒரு ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
கார்ன் மாவு – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லித்தழை, அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு, உப்பு, கரம் மசாலாத் தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து ஒரு கரண்டியில் சிறு சிறு வட்டங்களாக ஊற்றி இருபுறமும் நன்றாக வெந்தபின் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தவற்றை எடுத்து அதில் மிளகுத்தூள் தூவி சாப்பிட சுவை அள்ளும். இதை மாலை நேரத்தில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாக சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் ஒன்றாகும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதை நீங்கள் சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். எனவே கட்டாயம் ஒருமுறை செய்து பாருங்கள்.
முட்டையின் நன்மைகள்
தினமும் முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். முட்டை புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் என்றும் கூறலாம். முட்டையில் இருந்து கிடைக்கும் புரதம் உயர் தர புரதம் ஆகும்.
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. நீங்கள் தினமும் 2 வேகவைத்த முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எனவே தினமும் உங்கள் உணவில் முட்டைகள் எடுப்பதை உறுதிப்படுத்தி உங்கள் ஆரோக்கியம் மேம்பட வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு புரதம் (ஒரு முட்டையில் 6 கிராம் உள்ளது), வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12 (2 வேகவைத்த முட்டையில் 1.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது), முட்டையில் 0.6 கிராம் வைட்டமின் பி2 உள்ளது. 24 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. 2 முட்டையில் 28 மைக்ரோகிராம் செலினியச்சத்துக்கள் உள்ளது. கோலைன்கள் நிறைந்தது. இரும்புச்சத்துக்கள், சிங்க் சத்துக்கள் கொண்டது. இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டையை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்