Egg Mittai : முட்டை மிட்டாய்; இதுவரை நீங்கள் சாப்பிட்டே இருக்காத முட்டை ரெசிபி! சூப்பர் சுவையானது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Mittai : முட்டை மிட்டாய்; இதுவரை நீங்கள் சாப்பிட்டே இருக்காத முட்டை ரெசிபி! சூப்பர் சுவையானது!

Egg Mittai : முட்டை மிட்டாய்; இதுவரை நீங்கள் சாப்பிட்டே இருக்காத முட்டை ரெசிபி! சூப்பர் சுவையானது!

Priyadarshini R HT Tamil
Jan 25, 2025 04:43 PM IST

Egg Mittai :முட்டை மிட்டாய் என்ற ரெசிபி செய்வது எப்படி என்று பாருங்கள்.

Egg Mittai : முட்டை மிட்டாய்; இதுவரை நீங்கள் சாப்பிட்டே இருக்காத முட்டை ரெசிபி! சூப்பர் சுவையானது!
Egg Mittai : முட்டை மிட்டாய்; இதுவரை நீங்கள் சாப்பிட்டே இருக்காத முட்டை ரெசிபி! சூப்பர் சுவையானது!

முட்டை – 6

சர்ககரை – 200 கிராம் (பொடித்துக்கொள்ளவேண்டும்)

நெய் – தேவையான அளவு

பாதாம் – 100 கிராம்

(இதில் 50 கிராம் பாதாம் எடுத்து ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவேண்டும். எஞ்சிய பாதாமை பொடித்துக்கொள்ளவேண்டும்)

குங்குமப்பூ – கால் ஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்

அல்லது

ஏலக்காய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு லிட்டர் பாலை கோவா பதத்துக்கு வரும் வரை நன்றாக காய்ச்சிக்கொள்ளவேண்டும். பால் கெட்டியாக திரண்டு வரும்போது எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஊறவைத்த பாதாமில் கால் கப் பால் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்து கலந்துகொள்ள வேண்டும். அதில் கோவா, அரைத்த பாதாம் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து கலந்துகொள்ள வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, குங்குமப்பூ அல்லது ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பீட் செய்து வைத்துள்ள மாவை அதில் சேர்த்து நல்ல கெட்டியாகும் வரை குக் செய்துகொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி, அதில் கெட்டியான மாவுக்கலவையை பரப்பவேண்டும். இதை மேலேயும் சிறிது நெய் ஊற்றி பொடித்த பாதாமை உதிர்த்து சேர்க்கவேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சில நிமிடங்கள் ப்ரி ஹீட் செய்துகொள்ளவேண்டும். அதில் ஒரு ரிங் வைத்து அதன் மேல் இந்த தட்டை வைத்து, மூடிவைத்து 40 முதல் 45 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவேண்டும்.

பின்னர் எடுத்து ஆறியவுடன் வேறு ஒரு தட்டுக்கு மாற்றிவிட்டு, வெட்டி சாப்பிட சுவை அள்ளும்.

இந்த முட்டை மிட்டாயை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இது ஒரு சிறந்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ். பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்கள் குஷியாவார்கள். எனவே கட்டாயம் ஒருமுறை செய்துதான பாருங்கள்.

முட்டையை சாப்பிட சில குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அவர்களை முட்டை சாப்பிட வைக்கும் எளிய வழியாகும். முட்டையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதனால் அவர்களுக்கு இது நன்மையைத்தான் தரும். வெள்ளை சர்க்கரைக்க பதில் நாட்டுச்சர்க்கரை அல்லது பிற சர்க்கரைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.