Egg Masala kheema: தாபா ஸ்டெய்ல் முட்டை மசாலா கீமா.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!-egg masala kheema dhapa style egg masala keeman try this once - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Masala Kheema: தாபா ஸ்டெய்ல் முட்டை மசாலா கீமா.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Egg Masala kheema: தாபா ஸ்டெய்ல் முட்டை மசாலா கீமா.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 01:00 PM IST

முட்டை மசாலா கீமா தாபா ஸ்டைலில் எப்படி சமைக்கலாம் என பார்க்கலாம். இது சூடான சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தாபா ஸ்டெய்ல் முட்டை மசாலா கீமா
தாபா ஸ்டெய்ல் முட்டை மசாலா கீமா (Dindigul Food Court/youtube)

முட்டை மசாலா கீமா செய்முறைக்கு தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை - 4

சீரகம் - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

மிளகாய் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய் - அரை ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

தண்ணீர் - போதுமானது

கொத்தமல்லி - ஒரு கொத்து

குடைமிளகாய் - ஒன்று

தக்காளி - ஒன்று

கொத்தமல்லி தூள் - அரை ஸ்பூன்

மிளகு தூள் - கால் ஸ்பூன்

சீரகப் பொடி - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டை மசாலா கீமா செய்முறை

1. முதலில் முட்டையை வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி தனியாக வைக்கவும்.

2. இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். அந்த எண்ணெயில் சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

4. வெங்காயத்தை நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

5. பிறகு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.

6. இவை அனைத்தும் நன்கு கொதித்ததும் தக்காளி விழுதாக அரைத்து சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

7. தக்காளி வதங்கியதும், சீரகத் தூள், மல்லித்தூள், மிளகுத் தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

8. குறைந்த தீயில் சமைக்க வேண்டும். மேலே மூடி வைக்க வேண்டும்.

9. அதன் பிறகு குடைமிளகாயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

10. இப்போது வேகவைத்த முட்டைகளை  நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

11. கடாயில் உள்ள கலவையில் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து விட வேண்டும்.

12. நன்றாக கலந்து ஐந்து நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். கடைசியாக இறக்கும் முன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

13. மேலே எலுமிச்சை சாற்றை ஊற்றி அடுப்பை அணைத்து விடலாம். சிலர் மேல் வெண்ணெய்யும் போடுவார்கள். அதன் சுவை அலாதியானது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும். சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் நன்றாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.