தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Egg Masal You Can Make Restaurant Style Egg Masala At Home.. Even Kids Will Love It

Egg Masala Gravy: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை மசால் வீட்டிலே ஈஷியா செய்யலாம் வாங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 04, 2024 11:30 AM IST

Egg Masala Gravy: ரெஸ்டாரண்ட் ஸ்டெயிலில் வீட்டிலேயே ஈஷியாக செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால் உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும். ஒருமுறை சமைத்தால், மீண்டும் மீண்டும் செய்து தர சொல்லி கேட்பார்கள். இது குறிப்பாக ரொட்டி, சப்பாத்தி மற்றும் வெஜ் பிரியாணிக்கு நன்றாக இருக்கும்

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை மசால் வீட்டிலே ஈஷியா செய்யலாம் வாங்க..
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை மசால் வீட்டிலே ஈஷியா செய்யலாம் வாங்க..

ட்ரெண்டிங் செய்திகள்

முட்டை வெண்ணெய் மசாலா செய்முறைக்கு தேவையான பொருட்கள்

முட்டை - நான்கு

வெங்காயம் - இரண்டு

தக்காளி - மூன்று

பூண்டு பல் - ஆறு

இஞ்சி - சிறிய துண்டு

உப்பு - சுவைக்க

எண்ணெய் போதும்

முந்திரி – 20

தண்ணீர் - போதுமானது

பிரியாணி இலை - இரண்டு

மிளகாய் - ஒரு ஸ்பூன்

கரம் மசாலா - அரசஸ்பூன்

கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - இரண்டு ஸ்பூன்

முட்டை வெண்ணெய் மசாலா செய்முறை

  1. முட்டை மசாலாவிற்கு முதலில் மசால் தாயார செய்ய வேண்டும். 

2. முதலில் முந்திரியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. பிறகு முட்டையை வேகவைத்து அதன் மேல் தோல் உரித்து தனியாக வைக்கவும்.

4. இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.

5. பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

6. நிறம் மாறும் வரை வதக்கிய பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

7. தக்காளி நன்றாக வதங்கிய பின் பூண்டு விழுது, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

8. அதில் முன் ஊறவைத்த முந்திரியை சேர்த்து வதக்கவும்.

9. இப்போது அடுப்பை அணைத்து விட்டு , இந்த முழு கலவையையும் ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து மிருதுவான பேஸ்ட் செய்து கொள்ளவும். மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

10. இப்போது கடாயை அடுப்பில் வைத்து மீண்டும் எண்ணெய் சேர்க்கவும்.

11. எண்ணெயில் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

12. முன்பு கலந்து வைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

13. அதனுடன் மிளகாய், கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும். முட்டை மசாலுக்கு தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்

14. பின் வேகவைத்த முட்டைகளை சேர்த்து கலக்கவும். மீண்டும் மூடி பத்து நிமிடம் சமைக்கவும்.

15. மூடியை அகற்றி அதன் மேல் கொத்தமல்லி தூவி அடுப்பை மூடி விடலாம்.

16. அவ்வளவுதான் முட்டை மசாலா ரெடி.

17. இது புரோட்டா மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். பிரியாணியில் சாப்பிடவும் சுவையாக இருக்கும். சூடான சாதம், நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் ருசி அருமையாக இருக்கும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel