Tamil News  /  Lifestyle  /  Egg Gravy No Need For Gravy Look At The Egg Masala Ipti Senchu You Can Cook 2 Recipes At Once!

Egg Gravy : குழம்பே தேவையில்லை; முட்டை மசாலா இப்டி செஞ்சு பாருங்க! ஒரே நேரத்தில் 2 ரெசிபி செஞ்சுக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 23, 2024 12:27 PM IST

Egg Gravy : குழம்பே தேவையில்லை; முட்டை மசாலா இப்டி செஞ்சு பாருங்க! ஒரே நேரத்தில் 2 ரெசிபி செஞ்சுக்கலாம்!

Egg Gravy : குழம்பே தேவையில்லை; முட்டை மசாலா இப்டி செஞ்சு பாருங்க! ஒரே நேரத்தில் 2 ரெசிபி செஞ்சுக்கலாம்!
Egg Gravy : குழம்பே தேவையில்லை; முட்டை மசாலா இப்டி செஞ்சு பாருங்க! ஒரே நேரத்தில் 2 ரெசிபி செஞ்சுக்கலாம்! (amma samayal)

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 3

இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – கைப்பிடியளவு

மல்லித்தழை – கைப்பிடியளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

வெண்ணெய் – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

முதல் தேங்காய் பால் – ஒரு கப்

இரண்டாம் தேங்காய் பால் – ஒரு கப்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் முட்டையை வேக வைக்க வேண்டும். (முட்டை, தண்ணீர் இரண்டும் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரில் முட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முட்டை உடையாமல் அழகாக வரும்)

வெந்த முட்டையை இரண்டாக வெட்டி, கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, முட்டைகளை சேர்த்து இருபுறமும் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பின்னர் வெண்ணெய் சேர்க்க வேண்டும். வெண்ணெய் சேர்ப்பது முற்றிலும் உங்கள் விருப்பம்தான்.

பின்னர் சீரகம், நறுக்கிய பெரியவெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வெங்காயம் சுருண்டு வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் தக்காளியை நன்றாக அரைத்து சேர்க்க வேண்டும். அதனுடன், மல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து முதல் தேங்காய்ப்பால் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வறுத்துவைத்த முட்டை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக இறக்கப்போகும் முன் கொஞ்சம் கரம் மசாலா தூவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மசாலாவுடன் முட்டையை எடுத்து தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம்.

எஞ்சிய மசாலாவில் இரண்டாவது தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது சூடாக்கி குழம்பா எடுத்துக்கொள்ளலாம். உப்பு ஒவ்வொரு ஸ்டெபிலும் சேர்ப்பதால் அளவாக பார்த்து, பார்த்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம். புதினா மல்லி சேர்ப்பதால், இது பிரியாணி சுவையை மசாலாவுக்கு தரும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக சுருள வேகவிடவேண்டும்.

இதை நீங்கள் சாதத்திலும் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அனைத்து வகை வெரைட்டி ரைஸ்கள், பிரியாணிகள் என அனைத்துக்கும் நல்ல சைட்டிஷ் தான் இந்த முட்டை மசாலா.

முட்டையின் நன்மைகள்

ஒரு வேகவைத்த முட்டையில் வைட்டமின் ஏ 8 சதவீதம், ஃபோலேட் 6 சதவீதம், வைட்டமின் பி5 14 சதவீதம், வைட்டமின் பி12 23 சதவீதம், வைட்டமின் பி2 20 சதவீதம், பாஸ்பரஸ் 7 சதவீதம், செலினியம் 28 சதவீதம் உள்ளது. இதில் வைட்டமின் டி, இ, பி6, கால்சியம் மற்றும் சிங்க் சத்துக்களும் உள்ளது. 78 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 6 கிராம், கொழுப்பு 5 கிராம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்