Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி? – ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிட நினைப்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி? – ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிட நினைப்பீர்கள்!

Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி? – ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிட நினைப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2025 05:09 PM IST

Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி? – ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிட நினைப்பீர்கள்!
Egg Ghee Roast : முட்டை கீ ரோஸ்ட் செய்வது எப்படி? – ஒருமுறை ருசித்தால் தினமும் சாப்பிட நினைப்பீர்கள்! (vanitha's kitchen)

(முழு முட்டையை வேகவைத்து, உரித்து வெள்ளைக்கருவில் சிறிது மட்டும் கீறி வைத்துக்கொள்ளவேண்டும்)

முட்டை கீ ரோஸ்ட் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வர மிளகாய் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 6 பல்

புளிக்கரைசல் – சிறிதளவு

(புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு – தேவையான அளவு

மசாலா செய்ய தேவையான பொருட்கள்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

மிளகுத் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் மிளகு, சீரகம், வர மிளகாய், வர மல்லி, இஞ்சி, பூண்டு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து புளிக்கரைசலுடன் அரைத்துக்கொள்ளவேண்டும். இந்த பேஸ்டை அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கரைத்து முட்டைகளை லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.

அடுத்து, நெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து மசிய வேகவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து அரைத்த விழுது சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மசாலாவை கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான முட்டை கீ ரோஸ்ட் தயார்.

இதை பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என எதனுடன்வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என நினைப்பீர்கள். அடிக்கடி செய்து சாப்பிட தூண்டும் அசத்தல் சுவையான எக் கீ ரோஸ்ட்டை நீங்கள் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.