Egg : முட்டையின் மஞ்சள் கரு; வெள்ளைப்பகுதி! இரண்டிலும் என்ன உள்ளது? வாருங்கள் பார்க்கலாம்!
Egg : முட்டையின் வெள்ளைப்பகுதி மற்றும் மஞ்சள் கரு இவையிரண்டிலும் என்ன உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை முழுதாக தெரிந்துகொண்டால் உங்களுக்கு உகந்த பகுதி எது என்பது புரிந்துவிடும்.

முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் என்ன உள்ளது என்று தெரியுமா? எதில் ஆரோக்கியம் அதிகம் என்று பாருங்கள். முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அதிக புழக்கத்தில் உள்ள, நீங்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய உணவுகளுள் ஒன்று. ஆனால் ஆரோக்கியம் என்று வரும்போது, முட்டையின் வெள்ளைப் பகுதியா அல்லது மஞ்சள் கருவிலா அதிகம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்ற விவாதம் எழாமல இருக்காது. இவையிரண்டில் உள்ள நன்மைகள் மற்றும் வித்யாசங்களை பாருங்கள்.
முட்டையின் மஞ்சள் கரு
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, டி, கே, இ மற்றும் மற்ற வைட்டமின்களான ஃபோலேட் மற்றும் பி 12 போன்றவற்றை உள்ளடக்கிய பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சிங்க் போன்ற சில மினரல்களும் இதில் உள்ளன.
ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது
முட்டையின் மஞ்சள் கருவில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் மோனோ சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் பாலி சாச்சுரேடட் கொழுப்பு இரண்டும் அடங்கும். இவை உங்களின் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அது வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது.
கொலஸ்ட்ரால்
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இதயம் ஆரோக்கியம் என்று வரும்போது, இதுகுறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அண்மை ஆய்வு, இந்த கொலஸ்ட்ரால் ரத்த கொலஸ்ட்ரால் அளவில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கிறது. இதனால், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.
கலோரிகள்
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 55 கலோரிகள் உள்ளது. இது கலோரிகளின் அளவை அளந்து உண்பவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
முட்டையின் வெள்ளைப் பகுதி
இதில் கலோரிகள் குறைவு. ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதியில் 12 கலோரிகள் மட்டும்தான உள்ளது. இதனால் கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறப்பான தேர்வு.
புரதம் அதிகம்
முட்டையின் வெள்ளை பகுதியில் அதிக தரம் வாய்ந்த புரதச்சத்துக்கள் உள்ளது. இது ஒரு முட்டையில் 3.6 கிராம் உள்ளது. இது முக்கியமான அமினோ அமிலங்களைக் கொடுக்கிறது. அது தசைகளை சரிசெய்யவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கும் நல்லது.
கொழுப்பு இல்லாதது
முட்டையின் வெள்ளைப்பகுதியில் கொழுப்பு இல்லை. இதை குறைவான கொழுப்பு வேண்டும் என்பவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். கொழுப்பை தவிர்ப்பவர்களுக்கு சிறந்தது.
கொலஸ்ட்ரால் இல்லை
முட்டையின் வெள்ளைப் பகுதியில் கொலஸ்ட்ராலும் இல்லை. இது கொலஸ்ட்ரால் அளவில் அதிகம் கவனம் செலுத்துபவர்களுக்கு ஏற்றது.
பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்தது
முட்டையின் வெள்ளை பகுதியில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க உதவும். தசைகளின் இயக்கத்துக்கும் ஏற்றது.
எது ஆரோக்கியமானது?
புரதம் வேண்டுபவர்களுக்கு, முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு இரண்டும் குறைவு. ஆனால் புரதச்சத்துக்கள் அதிகம்.
ஆரோக்கிய கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கு,
உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுடன் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அன்சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக்கொள்ளலாம். இதில் வெள்ளைப்பகுதிகளை விட முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதய ஆரோக்கியம்
உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய நோய்கள் குறித்து அடிக்கடி நீங்கள் பரிசோதித்துக்கொள்பவர் என்றால், முட்டையின் வெள்ளைப்பகுதி உகந்தது. ஆனால் நீங்கள் ஆரோக்கியமாகவும், மாரடைப்பு ஆபத்துக்கள் இல்லாத நபராகவும் இருந்தால், நீங்கள் முழு முட்டையையும் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.
உடல் எடை குறைப்பு மற்றும் கலோரிகள் குறைந்த உணவு
முட்டையின் வெள்ளைப் பகுதி உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில் அதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை குறைவாக உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்