Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?-egg cutlet wow super snacks that kids will love do you know how to make egg cutlets - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?

Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Sep 01, 2024 10:47 AM IST

Egg Cutlet : வாவ் சூப்பர் என குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ், முட்டை கட்லெட் அதை எப்படி செய்வது என்று தெரியுமா?

Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?
Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ

முட்டை – 2 (கெட்டியாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்)

மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன்

பால் – ஒரு ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு ஸ்பூன்

மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்

ரஸ்க் தூள் – ஒரு கப்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முட்டையை வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதை தோல் உரித்து வட்டமாகவோ அல்லது உங்களுக்கு பிடித்ததுபோல் வெட்டிக்கொள்ளவேண்டும்.

உருளைக்கிழங்கை மிருதுவாகும் வரை வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதை தோல் உரித்து, பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.

உருளைக் கிழங்கு கலவையைக் பெரிய உருண்டை எடுத்து அதை தட்டி, அதன் உள்ளே முட்டையை வைத்து சுற்றிலும் முட்டை வெளியே தெரியாமல் மூடி, வட்டவடிமாக கட்லெட்களாக தட்டிக்கொள்ளவேண்டும்.

மைதா மாவில் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், செய்து வைத்துள்ள கட்லெட்களை மைதாமாவில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி இரண்டு பக்கமும்பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும். எண்ணெய் அல்லது நெய் கூட வறுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்லெட் மீது ரொட்டித்தூள் படிந்து இருக்கவேண்டும். மாவாகப் பிசைந்த உருளைக்கிழங்கு தளர்த்தியாக இருந்தால் தேவையான அளவு மைதா மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கலாம். அதைவிட பிரட் துண்டுகளை மிக்ஸியில் அடித்து பொடியாக்கி சேர்த்தால் நன்றாக இருக்கும். கோதுமை பிரட்டும் சேர்க்கலாம்.

குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதற்கு சாஸ் தொட்டுக்கொள்வது நல்லது.

முட்டையின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது.

கோலீன்கள் கொண்டது.

ஒமேகா -3 நிறைந்தது.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.