முட்டை கறி : தேங்காய்ப்பால் முட்டை கறி; சூப்பர் சுவையானது! ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முட்டை கறி : தேங்காய்ப்பால் முட்டை கறி; சூப்பர் சுவையானது! ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

முட்டை கறி : தேங்காய்ப்பால் முட்டை கறி; சூப்பர் சுவையானது! ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 12, 2025 05:51 PM IST

தேங்காய்ப் பால் முட்டைக் கறி : இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

முட்டை கறி : தேங்காய்ப்பால் முட்டை கறி; சூப்பர் சுவையானது! ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
முட்டை கறி : தேங்காய்ப்பால் முட்டை கறி; சூப்பர் சுவையானது! ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)

• இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)

• பச்சை மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

• சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• முட்டைகள் – 4

• மிளகு – சீரகத்தூள் – அரை ஸ்பூன்

• தேங்காய்ப் பால் – ஒரு கப்

• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

• மல்லித் தழை – சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய இஞ்டி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.

2. பச்சை வாசம் போனவுடன், அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவேண்டும்.

3. அடுத்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து சீரகத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் போதிய அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. மசாலாவின் பச்சை வாசம் போனவுடன், அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அது நல்ல கெட்டி பதம் வரும்போது, முட்டைகளை உடைத்து சேர்க்கவேண்டும். அதன் மேல் மிளகு – சீரகத்தூளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

5. இதை மூடியிட்டு மிதமான தீயில் வேகவைக்கவேண்டும்.

6. தேங்காய்த் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய்ப் பாலை பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

7. முட்டை மசாலாவுடன் சேர்ந்து வெந்தவுடன் அதில் இந்த தேங்காய்ப் பாலை சேர்க்கவேண்டும். தேங்காய்ப் பால் சேர்த்து மூடிபோட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

8. கடைசியாக, கரம் மசாலாத் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான தேங்காய்ப் பால் முட்டை கிரேவி தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது. இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.