முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!

முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated May 06, 2025 10:42 AM IST

முட்டை சட்னி : பொடிமாஸ் மற்றும் கலக்கி சேர்த்து வித்யாசமான சுவையை இந்தச் சட்னி கொடுக்கும். குறிப்பாக கலக்கி பிரியர்களுக்கு இது மிகவும் பிடித்த ரெசிபியாகும். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!
முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

• பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

• பச்சை மிளகாய் – 2 (கீறியது)

• தக்காளி – 1

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து நல்ல குழைவாக வேகவிடவேண்டும். கறிவேப்பிலையைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து முட்டையை சேர்த்து சட்னி பதத்துக்கு வதக்கவேண்டும். ட்ரையாக வதக்கக்கூடாது. மிதமான பதத்தில் வதக்கி குழைவாக எடுக்கவேண்டும். இதை சூடான தோசை அல்லது பரோட்டவுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் தினமும் கேட்பார்கள். முட்டை பிரியர்கள் என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். அவர்களின் ஃபேவரைட் ரெசிபியாகிவிடும். கலக்கியை விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடித்த ஒன்றாகும். பெரியவர்களுக்கும் பிடிக்கும். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.