Effects of Corona : கொரோனா பாதிப்பு காரணமாக குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு - அதிர்ச்சி ஆய்வு
30 சதவீதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆண்டுக்கு 4 முதல் 6 முறை காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டதாக (முன்பை விட அதிகமாக) தெரிவித்துள்ளனர். அதில் 47 சதவீதம் பெற்றோர்கள் நோயின் காரணமக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Community Social Media Platform Local Circles எனும் அமைப்பு இந்தியாவில் 317 மாவட்டங்களில் 31,000 பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா 3ம் அலைக்குப் பின்னர் (2022க்குப் பின்), பள்ளிக் குழந்தைகள் மத்தியில் ஃப்ளூ காய்ச்சலின் தாக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
30 சதவீதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆண்டுக்கு 4 முதல் 6 முறை காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டதாக (முன்பை விட அதிகமாக) தெரிவித்துள்ளனர். அதில் 47 சதவீதம் பெற்றோர்கள் நோயின் காரணமக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பாதிப்புக்குப் பின் ஏற்பட்ட நோய் எதிர்ப்புசக்திக் குறைவாலும், நுரையீரல் பாதிப்பாலும், ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பிற்குப் பின் குழந்தைகள் அதிகம் ஃப்ளூ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும், ஃப்ளூ காய்ச்சல் அதிக நாட்கள் பாதிப்பு ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, மருந்துகள் (Antibiotics) உட்கொள்ளும் கால அளவும் அதிகரித்துள்ளது.
மேலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும்போது, அவர்களால், பெற்றோர்களுக்கும், பெரியவர்கள், மற்றவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த ராஜீவ் ஜெயதேவன் (உப தலைவர்-இந்திய மருத்துவக் கழகம், அகில இந்திய பிரிவு) அவர்கள், ‘கொரோனா பாதிப்பின்போது, குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியதால், ஃப்ளூ வைரசுடன் ஏற்படும் தொடர்பு குறைந்துள்ளது என்றும், தற்போது வழக்கம்போல் குழந்தைகள் பள்ளி செல்வதால், ஃப்ளூ வைரஸுடன் உள்ள தொடர்பு மீண்டும் அதிகமாகி, அதன் காரணமாகவும், ஃப்ளூ பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டினாலும்,
அதிக நாட்கள் ஃப்ளூ பாதிப்பு ஏற்படுவதிலிருந்து, கொரோனா காரணமாக ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் அதிக ஃப்ளூ பாதிப்பிற்கு காரணமாக இருக்க முடியும்.
எனவே, பள்ளிக் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பில் கூடுதல் கவனம் பெற்றோர் செலுத்தவேண்டும். குழந்தைகள் மூலம் பிறருக்கு நோய்தொற்று ஏற்படுவது குறித்தும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது.
மருத்துவர்களும் இந்த விசயத்தை கவனத்தில்கொண்டு சிகிச்சையை தீர்மானிப்பது நல்லது என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.