Top 10 Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? இந்த 10 விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? இந்த 10 விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Top 10 Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? இந்த 10 விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Priyadarshini R HT Tamil
Aug 02, 2024 10:19 AM IST

Top 10 Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? எனில் இந்த 10 விஷயங்களை மட்டும் ஃபாலோ செய்யவேண்டும். செய்து பாருங்கள் கட்டாயம் மாற்றம் தெரியும்.

Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? இந்த 10 விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
Education Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக வேண்டுமா? இந்த 10 விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

மனநிறைவான காலை

படிப்பில் படுசுட்டியான திகழும் குழந்தைகள், அவர்களின் நாளை மனநிறைவுடன் துவங்குகிறார்கள். அவர்கள் காலையிலேயே தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்கிறார்கள். இது அவர்களின் மன அமைதிக்கு வித்திடுகிறது. 

அவர்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. அவர்களின் இலக்குகளை அவர்கள் காண்கிறார்கள். அது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. 

அவர்கள் நன்றாக கற்க உதவுகிறது. அவர்கள் கடகடவென படிப்பது எதையும் கடந்து செல்வதில்லை, நிறுத்தி நிதானமாக படித்து புரிந்தகொள்கிறார்கள். இதனால் அவர்கள் மூளை காலையிலே சுறுசுறுப்பாகிறது. அவர்களின் மொத்த நாளுமே இவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் ஏற்படுகிறது.

நேரத்தை பயன்படுத்தும் விதம்

பள்ளிப்பாடங்களில் சிறந்து விளங்குபவர்கள், அவர்களின் பணிகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். அவர்கள் போமோடோரோ என்ற நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். 

இதன் மூலம் அவர்கள், படிப்பதற்கும், இடைவெளிக்கும் சரியான நேரத்தை ஒதுக்குகிறார்கள். இவர்கள் டிஜிட்டல் டிடாக்ஸை பழகுகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் கவனச்சிதறல் குறைகிறது. அவர்கள் நாள் முழுவதும் செயல்திறனை அதிகரிக்கிறார்கள்.

கற்றல்

படிப்பில் படு சுட்டியான குழந்தைகள், நன்றாக கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை அவர்கள் கற்பனையில் விசுவலைஸ் செய்து அதன் மூலம் சிறப்பாக புரிந்துகொள்கிறார்கள். 

அவர்களின் அறிவை அவர்கள் மற்றவர்களுக்கு அதை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் கற்பதை தங்கள் அன்றாட வாழ்வில் பொருத்தி, அதன் மூலம் அவர்கள் அதை எளிதில் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்.

உடல் சார்ந்த நலன்

வழக்கமான உடற்பயிற்சி, சரிவிகித உணவு மற்றும் போதிய உறக்கம் என இந்தப்பழக்கங்கள்தான் படிப்பில் படுசுட்டியாக விளங்கும் குழந்தைகளின் முக்கிய பழக்கங்களாக உள்ளது. இந்த பழக்கங்கள் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

அவர்களின் கவனத்தை அதிகரிக்கிறது. மனநிலையை அமைதிப்படுத்தி, அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் திறம்படி செயல்பட உதவுகிறது. உடல் ரீதியாக அவர்கள் செயல்படவும், படிப்பில் சிறந்து விளங்கவும் இது தேவையான ஒன்றாக உள்ளது.

தொடர் வளர்ச்சி

படிப்பில் படு சுட்டியாக விளங்கும் குழந்தைகள், தொடர்ந்து சுய முன்னேற்றத்தை பழகிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து, அவர்களின் தோல்விகளில் இருந்து கற்கிறார்கள். 

அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து ஃபீட்பேக்குகளை பெறுகிறார்கள். சுய வெளிப்பாடு மற்றும் ஏற்கும் திறன் ஆகியவற்றால், அவர்கள் காலப்போக்கில் வளர்ந்து சிறக்க உதவுகிறது.

குறிப்புகள் எடுத்தல்

படிப்பில் படு சுட்டியா விளங்கும் குழந்தைகள், குறிப்புகளை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். தாங்கள் படிக்கும் பாடத்தை அவர்கள் மனதில் இறுத்தி, அவர்கள் சேமிக்கும் தகவல்களில் விசுவல் காட்சிகளை நினைத்து பார்ப்பார்கள். அவர்கள் முக்கிய பாயின்ட்களை தனியாக கோடிட்டு வைத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் இறுதியில் அதை மட்டும் படித்துக்கொள்கிறார். டிஜிட்டல் குறிப்பெடுக்கும் ஆப்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் படிப்பு மெட்டீரியல்களை அவர்கள் எளிதில் உபயோகிக்கவும், ஒன்றுசேர்த்து பாதுகாப்பாக தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள வைத்திருக்கவும் முடிகிறது.

சமூக தொடர்பு

படிப்பில் படுசுட்டியான மாணவர்கள், ஒரு நல்ல நெட்வொர்க்கை உருவாக்குகிறார்கள். அவர்கள் குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள். அவர்கள் ப்ராஜெக்ட்களை ஒன்றிணைந்து முடிக்கிறார்கள். 

அவர்கள் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் அனுபவசாலிகளிடம் இருந்து அறிவுரைகளைப் பெறுகிறார்கள். அது அவர்களுக்கு வழிகாட்டுதலையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

பேஷன்

படிப்பில் படு சுட்டியாக விளங்கும் மாணவர்கள் தங்களின் பேஷனையும் பின்பற்றுகிறார்கள். அது அவர்களின் கிரியேட்டிவிட்டியையும், புதுமை முயற்சிகளையும் வளர்த்தெடுக்கிறது. இதனால் அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள். 

அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் படிப்பு இரண்டையும் சமமாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இதன்மூலம், தங்கள் படிப்பில் சலிப்பை தவிர்த்து, உற்சாகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பொருளாதார கல்வி

படிப்பில் படுசுட்டியான குழந்தைகளுக்கு பொருளாதார அறிவு உள்ளது. அவர்கள் பட்ஜெட் போட்டு, பணத்தை பகுத்து முதலீடு செய்து நீண்ட நாள் பாதுகாப்புக்கு வழிவகுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்துக்காக சேமிக்கிறார்கள். இந்த பொருளாதார பழக்கங்கள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது.

மனஅழுத்தத்தில் இருந்து மீண்டெழுவது

படிப்பில் படுசுட்டியான குழந்தைகள், எவ்வித மனஅழுத்தத்தையும் ஏற்கிறார்கள். அவர்க்ள வாழ்வில் அவர்களுக்கு கிடைத்துள்ள நேர்மறையான விஷயங்களுக்கு நன்றி கூறுகிறார்கள். 

அவர்க்ள மனஅழுத்ததை மேலாண்மை செய்யும் திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் வளர்ச்சி மனநிலையைக் கொண்டுள்ளார்கள். அவர்களின் திறன்களில் கற்றல் மற்றும் தொடர்ந்து முன்னேறுவதும் இருக்கும். இந்த மீண்டெழும் திறன், அவர்கள் சவாலை எதிர்கொள்ளவும், ஊக்கத்துடன் உழைக்கவும் உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.