தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Economy What Is The Real Growth Of A Country An Analysis

Economy : ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது எது? – ஒரு அலசல்!

Priyadarshini R HT Tamil
Feb 25, 2024 06:59 AM IST

Economy : ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது எது? – ஒரு அலசல்!

Economy : ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது எது? – ஒரு அலசல்!
Economy : ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது எது? – ஒரு அலசல்!

ட்ரெண்டிங் செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர், ‘இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும், சாதாரண மக்களின் ஊதியத்தை உயர்த்தாத GDP வளர்ச்சியால் பயனில்லை’ என்றும் இந்திய நிதியமைச்சரிடம் தெளிவுபட தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் GDP வளர்ச்சியை வைத்தே எடை போடுகின்றனர்.

ஆனால், GDP வளர்ச்சி அடைந்தாலும்,

நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தால்,

நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்காமல் இருந்தால்,

அதை அனைவருக்குமான ‘வளர்ச்சி’ என எடுத்துக்கொள்ள முடியாது.

சமீபத்தில் இந்தியாவில் GDP வளர்ந்தாலும்,

ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இருப்பதுடன், நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பை உருவாக்காத GDP வளர்ச்சி மட்டுமே இந்தியாவில் நடந்துள்ளதால், அதை சிறப்பான வளர்ச்சி எனக் கருத முடியாது.

1991க்குப் பின் UPA அரசு ஆண்ட 10 ஆண்டுகளிலோ அல்லது NDA ஆண்ட 10 ஆண்டுகளிலோ, இந்திய வளர்ச்சி ஆண்டுக்கு 7.2 சதவீதம் என இருந்துள்ளது.

கிராமங்கள் நகரமயமாதலையும், விவசாயத்திலிருந்து தொழிற்துறைக்கும், பின்னர் சேவைத்துறைக்கும் வளர்வதை மட்டும் வளர்ச்சி என எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தியாவில் புதைபடிம எரிபொருளால் (Fossil Fuels) மட்டுமே அதிக ஆற்றல் பெறுவது 75 சதவீதம் நல்ல வளர்ச்சி என எடுத்துக்கொள்ள முடியுமா?

Czech-Canadian சுற்றுச்சூழல் அறிவியல் நிபுணர். Vaclav Smil எழுதிய ‘How the World really Works : A scientist's guide to our Past, Present, and Future’ புத்தகத்தில் புதைபடிம எரிபொருளின் வளர்ச்சி குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஸ்டீல், கான்கிரீட், பிளாஸ்டிக்ஸ் போன்றவை புதைபடிம எரிபொருளில் இருந்து பெறப்படுகிறது. உணவு உற்பத்திக்கும், அதை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் புதைபடிம எரிபொருளும், செயற்கை வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் மாசாகிறது.

Smilன் கருத்துப்படி, வேளாண் துறையில் இயந்திரமயமாதலைக் குறைத்தல், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்தல், புதைபடிம எரிபொருளின் (Fossil Fuels) பயன்பாட்டைக் குறைத்தல் நடந்தால் மட்டுமே நகரத்தை விட்டு கிராமங்களுக்கு மக்கள் சென்று பழைய உற்பத்தி முறையில் உணவுகள் உற்பத்தி செய்வது மட்டுமே (இயற்கை வேளாண்மைக்கு மாறுவது) கிராமங்களில் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்து சமச்சீரான வளர்ச்சியை (அனைத்து தரப்பினர் வளர்ச்சிக்கு) உறுதிசெய்ய முடியும்.

மேற்கத்திய வளர்ச்சி முறைகளை மட்டுமே இந்திய வளர்ச்சிக்கு திட்டமிடலை நடைமுறைத்படுத்துபவர்கள் பின்பற்றத் தேவையில்லை.

உள்ளூர் சூழலை கருத்தில்கொண்டு, உள்ளூர் வளர்ச்சியை, உள்ளூர் அளவில் மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றுவதும் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை நாம் உணர வேண்டும்.

63 சதவீதம் இந்திய மக்கள் இன்னமும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர், வேளாண் துறையிலும், அங்குள்ள சிறு தொழில்களில் மட்டுமே வேலை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இயந்திரமயமாக்கல் கிராமப்புறங்களில் குறைவே.

இந்த இந்திய உண்மைகளை கணக்கில்கொண்டே ‘வளர்ச்சியை’ இங்குள்ளோரின் நலன் கருதி திட்டமிடல் வேண்டும்.

இந்திய கிராமங்களில் புதிதாக செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் உலகிற்கே வழிகாட்டியாக அமையும். குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை (வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைத்து அனைவருக்கும் வேலை) மற்றும் அதிக ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்குமான வளர்ச்சி போன்றவற்றை உறுதிசெய்து உள்ளூர் பிரச்னைகளை உள்ளூர் மக்களின் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் தீர்வு கண்டு ‘வளர்ச்சி’ என்பதற்கான புது அர்த்தத்தை இந்த உலககிற்கு கற்றுத்தர முடியும்.

வளர்ச்சி என்பதை இந்திய சூழல்களுக்கு ஏற்ப மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள சமூக சூழலையும், நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பையும் பெருவாரியான மக்களுக்கும் அளிக்காத வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்