படுக்கையறையிலேயே சாப்பிடுகிறீர்களா? செரிமான பிரச்சனை முதல் பல உடல்நலக் கோளாறுகள் வரலாம்!
படுக்கையில் சாய்ந்தவாறு சாப்பிடுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் பல உள்ளன. அவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் அமர்ந்து நிமிறந்தவாறு இருக்கும் போது சாப்பிட வேண்டும்.

நம்மில் சிலர் சில சமயங்களில் படுக்கையில் அமர்ந்துக் கொண்டே சாப்பிடுவோம். அது அந்த நாளின் அவசரமான சமயமாகவோ அல்லது அலுப்பின் காரணமாகவோ படுக்கையில் அமர்ந்தே சாப்பிடுவோம். ஆனால் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. இது நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் ஏற்பாடு உடல்நல பிரச்சனைகளை காண்போம்.
செரிமான பிரச்சனைகள் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்
சாய்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ சாப்பிடுவது செரிமான செயல்பாட்டினை பாதிக்கக்கூடும். நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டும், இது செரிமானப் பாதை வழியாக உணவின் இயற்கையான இயக்கத்தை எளிதாக்குகிறது. படுக்கை போன்ற சீரற்ற மேற்பரப்பில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) போன்ற நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கும். சாப்பிட்ட உடனே படுத்துக்கொள்வதும் இந்த அறிகுறிகளை அதிகரிக்கும். எனவே, செரிமானத்திற்கு உதவவும், அமில வீச்சு அபாயத்தைக் குறைக்கவும் உணவின் போது நிமிர்ந்து இருப்பது அவசியம்.