தினமும் ஒரு டிராகன் பழம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு 9 நன்மைகள் கிடைக்கிறதாம்! என்னவென்று பாருங்கள்!
டிராகன் பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஒரு டிராகன் பழம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு 9 நன்மைகள் கிடைக்கின்றன. எனவே அவை என்னவென்றும், நீங்கள் ஏன் தினமும் டிராகன் பழங்கள் சாப்பிவேண்டும் எனவும் தெரிந்துகொள்ளுங்கள். பிங்க் வண்ணத்தில் உங்களை சுண்டியிழுக்கும் டிராகன் பழங்கள் உங்கள் கண்களுக்கு கொடுப்பது விருந்துதான். கண்களை கவர்ந்து இழுப்பது மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது இந்த டிராகள் பழங்கள். இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இனிப்பு சுவை கொண்டது. நல்ல நிறமானது. உங்களை கவர்ந்து இழுக்கும் தன்மைகொண்டது. இதில் உங்களை கவரும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் நாளின் சிறப்பான துவக்கம் ஆகும்.
100 கிராமில் 60 கலோரிகள்
100 கிராம் டிராகன் பழத்தில் 60 கலோரிகள் உள்ளது. இது உங்களுக்கு சிறந்த காலை உணவாகும். இதை நீங்கள் காலையில் உணவாக உட்கொள்ளும்போது உங்கள் கலோரிகளின் அளவு அதிகரிக்காது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
டிராகன் பழங்களில் கலோரிகள் குறைவு, இதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் வைட்டமின் சி சத்துக்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.