Healthy Diet: நோய் எதிர்ப்பு சக்திபெருக இந்த சூப்பர் உணவுகளை ஊறவைத்து சாப்டுங்க
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த சூப்பர் உணவுகளை ஊறவைத்து சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைத்த பட்டியலை இங்கு பார்க்கலாம்.
"சூப்பர்ஃபுட்ஸ்" என்ற சொல் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகளைக் குறிக்கிறது. இவை வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை.
ட்ரெண்டிங் செய்திகள்
உங்கள் தினசரி உணவில் சூப்பர்ஃபுட்களைச் சேர்ப்பது நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளைத் தடுக்கவும், உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவும்.
சூப்பர்ஃபுட்களின் நல்ல அளவைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வழி, காலையில் உங்கள் கிளாஸ் தண்ணீரைக் குடித்த பிறகு அவற்றை முதலில் சாப்பிடுவதாகும்.
கொட்டைகள் சிறியவை ஆனால் சக்திவாய்ந்த சூப்பர்ஃபுட்கள். இவற்றில் பி-வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்த பிறகு சாப்பிட்டால், நம் உடலால் எளிதாக செரிமானம் செய்து தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.
பாதாம் வைட்டமின் ஈ மற்றும் பி6 இன் சிறந்த மூலமாகும். இது மூளை செல்களில் உள்ள புரதங்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மூளையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் ஒமேகா3 மற்றும் ஒமேகா6 கொழுப்பு அமிலங்களும் பாதாமில் உள்ளன. பாதாமை ஊறவைப்பது இந்த சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.
தினமும் 5-7 பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தோலை உரித்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். அதன் பின்னர் தேநீர் அல்லது காபி அருந்தலாம்.
கருப்பு திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முதல்நாள் இரவு ஊறவைத்த கருப்பு திராட்சையை காலையில் சாப்பிட்டால் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவும்.
ஊறவைத்த திராட்சைகளில் பாலிபினால்கள், பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை உங்கள் கண்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதம், வயது தொடர்பான மாகுலர் சிதைவு, கண்புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவும். முடி உதிர்தல், நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
2 வால்நட் பருப்புகளை அரை கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள். வால்நட்ஸ் உங்கள் மூளை சக்தி, நினைவாற்றல் மற்றும் செறிவு திறனை அதிகரிக்க உதவும். ஊறவைத்த வால்நட் பருப்பை உங்கள் குழந்தையின் தினசரி உணவில் சேர்த்துக் கொடுங்கள். இது அவர்களின் மனதைக் கூர்மைப்படுத்தவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும் உதவும்.
ஊறவைத்த 2 அத்திப்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் குடல் ஆரோக்கியத்துக்குப் பல அதிசயங்களைச் செய்யும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அத்திப்பழங்கள் மலச்சிக்கலைப் போக்க உதவும், ஏனெனில் அவற்றில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் நிறைந்துள்ளன. இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.