இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்; உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்; உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும்!

இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்; உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Oct 15, 2024 11:50 AM IST

இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள், உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும். மேலும் உடலில் கொலாஜென் அளவை அதிகரிக்கச் செய்யும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்; உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும்!
இந்த ஜெல்லியில் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்; உங்கள் உடலில் கொலாஜென் அளவு அதிகரிக்கும்!

தேவையான பொருட்கள்

கிரீன் டீ பேக்குகள் – 5

தண்ணீர் – ஒரு டம்ளர்

தேன் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழம் – 1

ஜெலட்டின் – சிறிதளவு

செய்முறை

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீ பேக்குகளைப் போட்டு ஊற வைக்கவேண்டும். அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்துவிடவேண்டும். ஜெலட்டின் சேர்த்து கலந்துவிடவேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆறியபின் ஃபிரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவேண்டும். பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். தினமும் இதை 10 கிராம் அளவுக்கு எடுத்துக்கொண்டால் அது உங்கள் உடலில் தேவையான அளவு கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் சி நிறைந்த உணவு எடுக்க வேண்டும்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். சிட்ரஸ் பழங்கள், பெரிகள் மற்றும் குடை மிளகாய் ஆகியவை உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜெனை அதிகரிக்கும். எனவே அவற்றை அதிகம் உணவில் உட்கொள்ள வேண்டும்.

கொலாஜென் சப்ளிமென்ட்கள்

ஹைட்ராலைஸ்ட் கொலாஜெள் மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும். அது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இந்த சப்ளிமென்ட்களில் பெப்டைட்கள் உள்ளது. இதை உடல் எளிதாக உறிஞ்சும். இது உங்கள் சருமத்தின் கொலாஜென் அளவை சருமம் தேக்கி வைத்துக்கொள்ள உதவும்.

புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு

புரதச்சத்துக்கள் நிறைந்த உணவில் இறைச்சி, முட்டைகள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதச்சத்துக்கள் உள்ளது. பீன்ஸ்கள் மற்றும் பருப்புகளில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. புரதச்சத்துக்கள் கிளைசின் மற்றும் ப்ரேலைன் போன்ற அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு மிகவும் உதவியானது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெரிகள், நட்ஸ்கள், கீரைகள் ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள கொலாஜெனை ஆக்ஸிடேடில் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்துகின்றன. இது சருமத்தில் முன்னதாக ஏற்படும் வயோதிகத்தை தடுக்கிறது. ஃப்ரி ராடிக்கல்கள் கொலாஜெனை சேதப்படுத்துகின்றன.

ஆட்டு எலும்பு

ஆட்டு எலும்பில் அதிகளவில் கொலாஜென் மற்றும் கிளைசைன் மற்றும் ப்ரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இது சருமத்தை பாதுகாக்கும். எனவே எலும்பு சூப்பை அதிகம் பருகுவது உடலுக்கு நல்லது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதம், சரும நெகிழ்தன்மையை அதிகரிக்கும். சுருக்கத்தை குறைத்து சரும ஆரோக்கியம் மேம்பட உதவும்.

சர்க்கரை சாப்பிடும் அளவை குறைக்கவேண்டும்

நீங்கள் அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது, அது சர்க்கரையின் மாலிக்யூல்கள், உங்கள் உடலில் உள்ள கொலாஜெனுடன் ஒன்றிணைந்து உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சருமத்தின் நெகிழ்தன்மையை குறைத்து சருமத்தை இருக்கமாக்கலாம். எனவே உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜெனை பாதுகாக்க சர்க்கரை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் சரும சேதம் தடுக்கப்படும். இது ஆரோக்கியமான மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சியை அதிகரிக்கும்.

இவற்றையெல்லாம் செய்யும்போது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, உங்கள் சருமம் பாதுகாக்கப்படும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.