Novel fruit : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க.. கண் பிரச்சனையை போக்க.. உடல் எடையை குறைக்க நாவல் பழம் சாப்பிடுங்கள்!
Jamun fruit Benefits : நாவல் பழங்கள், இலைகள் மற்றும் விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள், விதைகள் மற்றும் தண்டு ஆகியவை சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது.

Novel fruit : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க.. கண் பிரச்சனையை போக்க.. உடல் எடையை குறைக்க நாவல் பழம் சாப்பிடுங்கள்!
இந்தியா பிளாக்பெர்ரி என்றுஅழைக்கப்படும் நாவல்பழம், தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட சுவை மிகுந்த பழமாகும். கோடை காலம்தான் நாவல் பழத்தின் சீசனாக உள்ளது.
நாவல் பழம் பொதுவாக காடுகளில் விளையும் இப்பழம் சமீபகாலமாக தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. பருவமழைக் காலத்தில் அதிகம் கிடைக்கும் நாவல் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பல்வேறு வைட்டமின்கள் இருந்தாலும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அளவு அதிகமாக உள்ளது.
உடல் வெப்பம் கட்டுப்படும்
நாவல் பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் உள்ளன. இந்த குளிர்ச்சியான பழம் பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வளரும். இதனை உண்பதால் உடல் வெப்பம் கட்டுப்படும். இந்த பழத்தில் நிறைய நீர்ச்சத்து இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.