Evening Soups: குளிர்ச்சி மிகுந்த மாலை நேரத்தில் உடலுக்கு ஆற்றலை தரும் சூடான கீரை உருளை கலவை சூப்
குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை இழக்காமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் ஆற்றலை இழக்காமல் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
வெப்பநிலை குளிராக நிலவுவதால் உடலுக்கு இதம் தரும் விதாக சூடான பானங்கள் பருகுவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு, ஆற்றலையும் பெறலாம். அந்த வகையில் வழக்கமாக காபி, தேநீர் போன்ற பானங்களுக்கு பதிலாக, குளிர்கால மாலை பொழுதை இனிமையாக்கும் சூப் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
உடலுக்கு புத்துணர்வும், ஊட்டச்சத்துகளும் ஒரே நேரத்தில் கிடைப்பதற்கு சூப் சிறந்த சாய்ஸாக உள்ளது. அந்த வகையில் பசலை கீரை மற்றும் உருளை கிழங்கு சேர்ந்த சூப் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருள்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஒரு வெங்காயம் சிறிதாக நறுக்கியது
பூண்டு பற்கள் தேவைக்கு ஏற்ப
உருளை கிழங்கு - 4
காய்கறி வேகவைத்த கலவை
உப்பு, மிளகு தேவைக்கு ஏற்ப
பசலை கீரை பொடிதாக நறுக்கியது - 6 கப்
பால் - 1 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு ஆகிவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் காய்கறி கலவை, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின் அடுப்பை சிம்மில் வைத்து உருளைகிழங்கு மென்மையாக மாறும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்த பின் சிறிதாக நறுக்கிய பசலை கீரையை சேர்த்து கிளறிய பின் வேக வைக்கவும்.
நீங்கள் க்ரீம் சூப்பாக பருக விரும்பினால், பால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் இந்த கலவையை நன்கு இன்னும் சில நிமிடங்கள் வேகவைத்து சூடான சூப்பாக பருகலாம்.
பசலை கீரை ஆரோக்கியம் மிக்க கீரை வகையாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், வெரப்பநிலை குறைவான மாலை நேரத்தில் உடலில் குளிர்ச்சியை போக்கி கதகதப்பாக வைக்கிறது. அத்துடன் உடல் ஆற்றலையும் தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்