தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Dyi Skin Care Tips Without Spending A Money

Skin Care: கையில் இருந்து ஒத்த ரூபாய் செலவு இல்லாமல் சருமத்தை பேனி காக்க எளிய வழிகள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 25, 2024 05:55 PM IST

சரும பராமரிப்புக்கென்று தனியாக பணம் ஒதுக்கி செலவழித்து அதனை பேனி காப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பைசா செலவு இல்லாமல் உங்கள் சரும அழகை பாதுகாப்பதற்கான எளிய டிப்ஸ் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

நீங்களாகவே செய்யக்கூடிய சரும பராமரிப்பு டிப்ஸ்
நீங்களாகவே செய்யக்கூடிய சரும பராமரிப்பு டிப்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

வெளிப்புற தோற்றத்தை வைத்தே தொடர்பை வைத்துக்கொள்ளும் வாழ்க்கை நடைமுறையில் சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதுதான். ஆனால் அதற்கு அதிக அளவில் விலை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

சருமத்தை அழகாக மாற்ற உதவும் விலை உயர்ந்த கிரீம்கள், சீரம்கள் போன்ற பல்வேறு அழகு சாதன பொருள்கள் பற்றி ஊடகங்களிலும், இணையத்திலும் பார்க்கப்படும் விளம்பரங்களினால் ஈர்க்கப்பட்டு அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் அவ்வாறு பணம் செலவழித்தும் எதிர்பார்த்த பலனும் கிடைக்காவிட்டால் கவலையின் உச்சத்துக்கே செல்ல நேரிடலாம்.

பணமும் செலவில்லாமல், எளிய முறையில் சரும அழகை பாதுகாப்பதற்கான வழி இருந்தால் யார்தான் அதை தெரிந்துகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி சொல்வதனால் என்ன பகல்கனவு காண்கிறீர்களா? என்று கேள்வி கேட்கவும் தோன்றும். அதற்கான பதிலாக சில நடைமுறை சாத்தியங்களை கூறுகிறார் பிரபல தோல் மருத்துவர் டாக்டர் டாடு.

நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தாலே போதுமான அளவில் சருமத்தை பராமரித்த அழகை பேனி பாதுகாக்கலாம் என்கிறார். சருமத்துக்கு கூடுதல் கவனிப்பு, ஈரப்பதமும் மிகவும் அவசியம் என்று கூறும் அவர், அதன் அழகை கெடாமல் பார்த்துக்கொள்வதற்கான வழிகளை விவரித்துள்ளார்.

முதலில் உங்கள் படுக்கையை கவனியுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் படுக்கை மற்றும் தலையணையை அவ்வப்போது புதிதாக மாற்றி பயன்படுத்து வந்தாலே சருமத்தில் வித்தியாசத்தை உணரலாம். ஏனென்றால் நாம் படுத்து உறங்கு படுக்கை, தலையணையில் எக்கச்சமான அழுக்குகள் படித்துள்ளன. குறிப்பாக எண்ணெய், பாக்டீரியா, முகம் மற்றும் தலையிலிருந்து செத்துப்போன சரும செல்கள் என ஏராளமாக உள்ளன.

இவை சருமத்தில் படித்து அதன் பொலிவை இழக்க செய்கின்றன. இதை தடுப்பதற்கு வாரம் ஒரு முறையாவது மாற்றி அமைத்து பாக்டீரியாக்கள் முகத்தில் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் முகத்தில் வெடிப்பு ஏற்படுவது, முகப்பரு உண்டாவது தடுக்கப்படுகிறது.

உங்கள் முகத்தை கீழ் பகுதியில் வைத்து படுக்ககூடாது

நீங்கள் தூங்கும் நிலைக்கு ஏற்ப சருமத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை காணலாம். எனவே தூங்கும்போது உங்கள் முகம் தரையில் படாமல், பின் பகுதி தரையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இதன் மூலம் தலையணை அல்லது படுக்கையில் இருக்கும் அழுக்குகள் முகத்தில் தங்கிவிடாமல் பார்த்துகொள்ளலாம். முகத்தை தரையில் வைத்து படுத்தால் முகப்பரு, சுருங்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளுதல்

நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வியர்வை வெளியேறுகிறது. அப்போது உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வியர்வை வழியாக வெளியேறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சீராக செயல்பட உதவுகிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு உங்களுக்கு கிடைக்கும் சிவந்த கன்னங்கள் மற்றும் பிரகாசம் வேறெந்த அழகு சாதன பொருள்கள் வாங்கினாலும் கிடைக்காது.

நல்ல தூக்கம் தேவை

நல்ல தூக்கம் அழகான சருமத்தை பெறுவதற்கான வழியாக உள்ளது. உடல் பாகங்களின் சரிபார்க்கும் பணி, வளர்ச்சிகள் போன்றவை தூக்கத்தின்போதே நிகழ்கிறது. எனவே போதிய தூக்கம் இல்லாவிட்டால் கரு வளையங்கள் தோன்றுவதோடு, சருமம் பொலிவு இழந்து சுருக்கங்கள் நிறைந்து காணப்படும். நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதும் உடலுக்கு மட்டுமல்ல சருமத்துக்கு நன்மை தருகிறது.

உங்கள் போனில் ஸ்கிரீன்களை அவ்வப்போது சுத்தமாக்க வேண்டும்

மொபைல் கைவிட்டு பிரியாத இந்த தொழில்நுட்ப யுகத்தில் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் வீட்டு கழிப்பறையை விட மிகவும் அழுக்கு நிறைந்ததாக போன் ஸ்கிரீன் உள்ளது. எனவே சுகாதரமற்ற எந்த பொருளையும் உங்கள் முகம் அல்லது சருமங்களுக்கு அருகே வைக்க வேண்டாம். அழுக்கு நிறைந்து காணப்படும் போன்களை நன்கு துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்