உலர் திராட்சை தண்ணீர் : திராட்சை ஊறவைத்த தண்ணீரில் உள்ள சத்துக்கள் என்னவென்று பார்க்கலாமா?
உலர் திராட்சை தண்ணீர் : உலர்ந்த திராட்சையை ஊறவைத்து பருகும்போது உங்கள் உடலுக்கு என்னென்ன சத்துக்கள் கிடைக்கிறது?

வைட்டமின் சி
உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் மினரல்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. இது தலைமுடி ஆரோக்கியம் மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்த தேவையான சத்துக்கள் ஆகும். இந்த வைட்டமின் சி சத்துக்களால் உலர்ந்த திராட்சை தண்ணீர் கொலாஜெனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது தலைமுடியை வலுப்படுத்துகிறது மேலும் அதன் நெகிழ்தன்மைக்கும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. அது தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்தது
உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதித்து போராடி தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க உதவும் சத்து ஆகும். இது இளநரையையும் போக்கி, முடி உதிர்வையும் தடுக்கிறது.
இரும்புச்சத்துக்கள்
உலர்ந்த திராட்சையில் உள்ள இரும்புச்சத்துக்கள், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுபவையாகும். இது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகக்ளைக் கொடுக்கிறது. இது தலைமுடி அடர்த்தியை அதிகரிக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
திராட்சையை ஊறவைத்த தண்ணீர் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. இதனால் வீக்கத்தைக் குறைக்கிறது. இது வறண்ட தலைமுடி, பொடுகு போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. இது எரிச்சலுக்கு இதமளிக்கிறது. தலையில் இயற்கை எண்ணெயை ஆரோக்கியமான அளவில் வைக்கிறது.
இயற்கை எண்ணெய்
இந்த உலர்ந்த திராட்சைகளில் அதிகளவில் இயற்கை எண்ணெய் அதிகம் உள்ளது. இது ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தை உங்கள் தலைமுடிக்கு வழங்குகிறது. இதனால் தலைமுடிக்கு பளபளப்பான தோற்றம் கிடைக்கிறது. இதனால் பொலிவிழந்த கேசம் உயிர் பெறுகிறது.
தினமும் பருகுவேண்டும்
நீங்கள் உலர்ந்த திராட்சை ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகவேண்டும். இதனால் உங்களுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. திராட்சையை இரவில் ஊறவைத்துவிட்டு, அந்த தண்ணீரை தினமும் காலையில் பருகவேண்டும்.
தலையில் தேய்க்கலாம்
நீங்கள் உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தலையில் தடவலாம். வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்யவேண்டும். பின்னர் அதை சில மணி நேரங்களில் தலையை அலசிவிட்டு, பார்க்கும்போது, படிப்படியான மாற்றத்தை நீங்கள் காண முடியும்.
எச்சரிக்கை
உலர்ந்த திராட்சை ஊறவைத்த தண்ணீர் பொதுவாக பாதுகாப்பானதுதான். ஆனால் சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படும். எனவே குறிப்பிட்ட சரும நிலை உள்ளவர்கள் இதை தவிர்க்கவேண்டும். இதனால் நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது முயற்சி செய்துவிட்டு தொடர்ந்து எடுத்துக்கொள்வது பாதுகாப்பு. நீண்ட கூந்தலும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்