தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Dry Fruits Which Dry Fruit Should Be Taken In The Morning What To Avoid Here Is The Explanation

Dry Fruits : காலையில் எழுந்தவுடன் இதை ஒரு கைப்பிடி எடுத்தால் போதும்! தவிர்க்க வேண்டியவை எது என தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 30, 2024 04:25 PM IST

Dry Fruits : காலையில் எந்த ட்ரை ஃப்ரூட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ விளக்கம்!

Dry Fruits : காலையில் எந்த ட்ரை ஃப்ரூட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ விளக்கம்!
Dry Fruits : காலையில் எந்த ட்ரை ஃப்ரூட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

காலையில் எந்த ட்ரை ஃப்ரூட் எடுக்க வேண்டும்?

ஆரோக்கியமும், கட்டமைப்பான உடற்பாங்குடன் இருப்பது இப்போதெல்லாம் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. எனவே காலையில் எந்த உணவை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதுதான் அன்றைய நாள் முழுவதற்குமான சக்தியை கொடுக்கிறது. 

எனவே காலை நீங்கள் சாப்பிடும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் அவசியம். காலையில் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகளுள் ட்ரை ஃப்ரூட்ஸ் முக்கியமாக உள்ளது. ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. 

எனவே நீங்கள் காலையில் எதுபோன்ற ட்ரை ஃப்ரூட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பாதாம்

பாதாமில் புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவற்றை காலையில் எடுத்துக்கொள்வது நல்லது. அது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் மூளையின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்க காலையிலே எடுத்துக்கொள்வது நல்லது. 

இதை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் பளபளக்கும் சருமத்தைப்பெற முடியும். இது எலும்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

வால்நட்கள்

வால்நட்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்துக்கும். மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கும் உதவுகிறது. 

கண் ஆரோக்கியத்துக்கு உதவி, வீக்கம் மற்றும் அழற்சி பாதிப்புகளில் இருந்து உடலை காக்கிறது. மேலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறது.

பேரிச்சை பழம்

இதில் இயற்கை சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாகக்கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது.

அத்திப்பழம்

செரிமானத்துக்கு நன்றாக உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இவை எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய், வீக்கத்தை எதிர்த்து போராடி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

ஓரிவு ஊற வைக்க வேண்டும்

இந்த ட்ரை ஃப்ருட்களை ஓரிவு ஊறவைக்க வேண்டும். அப்போது அவை எளிதாக செரிமானமாகும். இவற்றை ஊறவிடுவதால் இவற்றில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் ஏதேனும் பிரசர்வேடிவ்கள் இருந்தால் அவற்றின் அளவையும் அது குறைக்கிறது. 

பாதாம், பிஸ்தா, வால்நட்கள், திராட்சைகள், அத்திப்பழங்கள், பேரிச்சை பழங்கள் மற்றும் ஆப்பிரிகாட்கள் என எதை வேண்டுமானாலும் நீங்கள் ஊறவைத்து கொடுக்கலாம்.

கலந்து உண்ணலாம்

இந்த ட்ரை ஃப்ரூட்களை நீங்கள் காலையில் உண்ணும் உணவுடன் கலந்து சாப்பிடலாம். பருப்பில் அல்லது ஓட்ஸில், தயிரில், சாலட்களில், ஸ்மூத்திகளின் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுடன் கலந்து சாப்பிடலாம். அதிகப்படியான சர்க்கரை குறித்து கவலைவேண்டாம். அவை இயற்கையான சர்க்கரை என்பதால் உங்கள் உடலுக்கு நன்மையே கொடுக்கும்.

கலோரிகள்

ஊட்டச்சத்து அளவுகளில் பார்த்தால் ட்ரை ஃப்ரூட்களில் அதிகளில் கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் உட்கொள்ளும் அளவை 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்க முடியும். பல் பிரச்னைகளை தவிர்க்க முடியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

ட்ரை கிரேப்கள்

ட்ரை கிரேப்களில் சர்க்கரை அளவு அதிகம் இருக்கும். ஆனால் அதை அதிகளவோ அல்லது அடிக்கடியோ எடுத்துக்கொண்டால் அது உங்களுக்கு பல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே இவற்றை காலையில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மற்ற நேரங்களில் அளவோடும், ஊறவைத்தும் எடுத்துக்கொள்வது மலச்சசிக்கலை போக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்