தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

Priyadarshini R HT Tamil
May 18, 2024 01:30 PM IST

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிட்டால் போதும்.15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும். அது என்ன உருண்டை தெரியுமா?

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!
Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

பாதாம் – அரை கப்

முந்திரி – அரை கப்

பிஸ்தா – கால் கப்

வால் நட் – அரை கப்

பேரிட்சை பழம் – 25 (விதை நீக்கியது)

நெய் – தேவையான அளவு

ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, பாதாமை சேர்த்து சிறிது சேரம் வறுத்துவிட்டு, அடுத்து முந்திரி சேர்த்து வறுக்கவேண்டும். சிறிது நேரத்தில் பிஸ்தாவும் சேர்த்து வறுக்கவேண்டும்.

அனைத்தும் மனம் வர வறுத்த பின்னர் ஆறவைக்கவேண்டும். அடுத்து வால்நட்களை வறுக்கவேண்டும்.

பின்னர் விதைகளை நீக்கிய பேரிட்சை பழத்தை அடுப்பில் சேர்த்து வறுத்து அறவைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் நட்ஸ்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொண்டு, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பேரிட்சையை மிக்ஸி ஜாரில் தனியாக சேர்த்து அரைத்துவிட்டு, அதில் அரைத்து வைத்துள்ள நட்ஸ் பொடிகளை சேர்க்கவேண்டும்.

அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்து, இறுதியில் சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய்ப்பொடி தூவி, நெய்விட்டு நன்றாக பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வர 15 நாளில் முடி உதிர்வு முற்றிலும் நின்றுவிடும்.

இதை முடி உதிர்வைப்போக்குவது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் தரும் என்பதால், வீட்டில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு உருண்டைகள் வரை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் சாப்பிடக்கூடது. இதில் உங்களுக்கு பிடித்த விதைகளையும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கை-கால் வலி, இடுப்பு வலி, உடல் வலி, உடல் சோர்வு, மூட்டு வலி, பார்வை குறைபாடு, முடி உதிர்வு என அனைத்தும் குணமாகும்.

மேலும் உடல் எடை குறைக்க விரும்புவோர். மற்ற ஸ்னாக்ஸ்களுக்கு பதிலாக இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். இதனால் நீங்கள் வேறு உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு, உங்களின் உடல் எடை குறைப்புக்கு அது உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்