தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dry Fruit Milkshake: ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ்.. யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?

Dry fruit Milkshake: ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ்.. யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2024 09:37 PM IST

150 மில்லி பால், பத்து பாதாம், பத்து முந்திரி பிஸ்தா. உலர் திராட்சை ஒரு 15 கிராம், பேரீச்சம் பழம் ஒரு ஐந்திலிருந்து ஆறு என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் அடித்து குடிக்கிறார்கள். இதில் சிலர் இதனுடன் இனிப்புக்காக சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள்.

ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ்!

இப்படி நாம் ஜூஸை எடுத்துக் கொள்ளும் பொழுது, அதில் 400 கிராம் அளவிற்கு கலோரிகளும், 54 கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட்டும், 11 கிராம் புரதமும், 19 கிராம் கொழுப்பும் ஐந்து கிராம் அளவிற்கு நார்ச்சத்தும் கிடைக்கிறது. இயற்கையான சர்க்கரை ஒரு 41 கிராம் என்ற அளவில் கிடைக்கிறது. 400 கலோரிகள் என்பது நீங்கள் நாலு இட்லியை, சட்னி சாம்பார் ரோடு  சாப்பிடுவதற்கு சமமானது.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.