Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இதை முயற்சியுங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இதை முயற்சியுங்க

Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ இதை முயற்சியுங்க

Priyadarshini R HT Tamil
Updated Sep 23, 2024 01:54 PM IST

Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ நீங்கள் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய எளிய தீர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ எளிய தீர்வு!
Dry Cough Home Remedy : பேசமுடியாமல் தொல்லை தரும் வறட்டு இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ எளிய தீர்வு!

அறிகுறிகள்

வறட்டு இருமல் வரும்போது உங்களுக்கு தொண்டையில் எரிச்சல் மற்றும் கரகரப்பு ஏற்படும். எனவே அதை நீங்கள் சரிசெய்துகொள்ள அடிக்கடி இருமுவீர்கள். கடுமையான இருமும்போது காற்று உள்ளே புகுந்து தொண்டையில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் தொண்டை வறண்டு தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏற்படும்.

வறட்டு இருமல் ஏற்பட காரணங்கள்

அலர்ஜி, ஆஸ்துமா, வேதிப்பொருட்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும் காற்றை சுவாசிப்பது.

மூச்சுக்குழாய் வீக்கம்

தொண்டை கரகரப்பு

கேஸ்ட்ரோஈசோபாஜல் ரிப்ளக்ஸ்

மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

குறிப்பாக உயர் ரத்த அழுத்த மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

மூக்கின் உள்புறத்தில் வீக்கம்

உள் நாக்கு வளர்ச்சி

நிமோனியா

புகைத்தல்

குரல்வளையில் பிரச்னை

நாள்பட்ட வறட்டு இருமலால் ஏற்படும் பிரச்னைகள்

சில நேரங்களில் வறட்டு இருமல் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயாக மாறும் வாய்ப்பு உண்டு. எனவே நாள்பட்ட வறட்டு இருமல் ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

இதயம் செயலிழப்பு, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், நாள்பட்ட நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய், உறக்க கோளாறுகள், காசநோய் போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

பொதுவாக வறட்டு இருமல் வரும்போது செய்யவேண்டியவை

அதிகமாக தண்ணீர் பருகவேண்டும்.

இருமல் மருந்துகள் அல்லது மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும்.

தேன் பருக்வேண்டும்.

வறட்டு இருமலை தவிர்க்க

வேதிப்பொருட்கள், மணமூட்டிகள், அலர்ஜி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் மணங்களை முகங்களை நுகர்ந்து பார்க்கக்கூடாது.

கைகளை கழுவுங்கள், நல்ல சுகாதார பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். சுவாச கோளாறுகள் அடிக்கடி ஏற்படாமல் தடுத்துக்கொள்ளுங்கள்.

புகைத்தலை நிறுத்தவேண்டும். புகைப்பிடிப்பவருட்ன் இருப்பதையும் குறைக்கவேண்டும்.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

இருமும்போது ரத்தம் வந்தால், மூச்சு விடுவதில் சிரமம், மேல் மூச்சு வாங்குவது, சோர்வு, குளிர், காய்ச்சல், நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

ஆனால் தீவிரமாக இல்லாதபோது உங்களுக்கு சில வீட்டு குறிப்புகளே உதவும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கடுகை ஒரு உரலில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து வறட்டு இருமல் வரும் நேரத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். வறட்டு இருமல் உடனடியான நின்றுவிடும். இதை நீங்கள் தொடர்ந்து, அடிக்கடி செய்யத்தேவையில்லை. வறட்டு இருமல் பேசவே விடால் தொல்லை செய்யும்போது ஒருமுறை செய்தால் மட்டும் போதும். இது உங்கள் உடனியாக தீர்வைத்தரும். எனவே கட்டாயம் இதை முயற்சி செய்து பாருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.