தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Drumstick Seed Benefits Fights Anaemia Just Eat This Seed Every Day For A Week

Drumstick Seed Benefits : ரத்த சோகையை அடித்து விரட்டும்! ஒரு வாரம் மட்டும் தினமும் இந்த விதை சாப்பிடுங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 17, 2024 08:31 AM IST

Benefits of Drumstick Seeds : முருங்கைக்காய், கீரை உள்ளிட்டவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் முழு உடல் ஆரோக்கியம் பெற முடியும்.

Drumstick Seed Benefits : ரத்த சோகையை அடித்து விரட்டும்! ஒரு வாரம் மட்டும் தினமும் இந்த விதை சாப்பிடுங்க போதும்!
Drumstick Seed Benefits : ரத்த சோகையை அடித்து விரட்டும்! ஒரு வாரம் மட்டும் தினமும் இந்த விதை சாப்பிடுங்க போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

நல்ல முற்றிய முருங்கைக்காயை காயவைத்து உள்ளே உள்ள விதைகளை மட்டும் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் வீட்டில் முருங்கை மரம் இருந்தால் நீங்களே செய்துகொள்ளலாம்.

முருங்கை விதையில் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, துத்தநாகம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

முருங்கை விதையை அதிகளவில் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பயன்படுத்தினால் உடலுக்கு பலன் தரும். இதயத்தை பலப்படுத்தும். இதயம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் நல்ல பலத்தை தரும். மூட்டுகளின் இணைப்புகளில் ஏற்படக்கூடிய வலியை நீக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான கால்சியம், நமது எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இந்த முருங்கை விதையை நமது உணவில் அன்றாடம் எடுத்துக்கொண்டால் தூக்க மின்மை குணமாகும். நமது உடலில் ஏற்படும் செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உடலில் உருவாவதை அதிகரிக்கும். புற்றுநோயை தடுக்கிறது. ரத்தசோகை நோயை நீக்கி உடல் சோர்வை சரிசெய்யும்.

பெண்களுக்கு சத்து குறைபாட்டால் ஏற்படும், தலைவலி, கால் வலி, தசைப்பிடிப்பு, நரம்பு இழுத்தல், நரம்பு சுண்டி இழுத்தல் ஆகிய அனைத்தையும் சரிசெய்யும்.

பயன்படுத்தும் முறை

முருங்கை விதையின் வெளியே உள்ள ஓடுகளை நீக்கிவிடவேண்டும். உள்ளே உள்ள பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் பொடித்துதான் பயன்படுத்தப்போகிறோம். எனவே ஓட்டுடனும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விருப்பம் இல்லாதவர்கள் அந்த ஓட்டை தட்டி எடுத்துவிட்டு விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 10 விதைகள் போதுமானது. இதை நிறைய வலிகளில் பயன்படுத்தலாம்.

இதை நெய்யில் நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து, ஆறவைத்து பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். முருங்கை விதையில் துவர்ப்பு, கசப்பு சுவை இருக்கும். அதை அப்படியே கடித்தும் சாப்பிடலாம். வறுத்து கடித்தும் சாப்பிடலாம்.

அந்தப்பொடியை பாலில் கலந்து கொதிக்கவைத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து பருகலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். ‘

குறிப்பாக எலும்பு தேய்மானம், உடல் சோர்வு, மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடி உதிர்வு உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை சுறுசுறுப்பாக்கும் அருமருந்தாக இது இருக்கும். எனவே கட்டாயம் முயற்சித்து பாருங்கள்.

முருங்கை விதையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அதனால்தான் முன்னோர்கள் முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான், அதாவத் 100 வயதிலும் கம்பு ஊனாமல் தெம்பாக நிமிர்ந்த நன்னடை போட்டு செல்வார்கள் என்பது இதன் பொருள்.

முருங்கைக்காய், கீரை உள்ளிட்டவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் முழு உடல் ஆரோக்கியம் பெற முடியும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்